fbpx

Rain: தென் தமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு…! வானிலை மையம் தகவல்

தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக தென்தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் காணப்படும். நாளை முதல் 7-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி, அதிகபட்சமாக கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 2 செ.மீ மழையும், திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, நாலுமுக்கு, காக்காச்சி, செர்வாலர் அணை, சேரன்மகாதேவி, தேனி மாவட்டம் பெரியகுளம், தென்காசி மாவட்டம் ராமநாதி அணை ஆகிய இடங்களில் 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

English Summary

Moderate rain likely in South Tamil Nadu today…! Meteorological Department information

Vignesh

Next Post

ஆதார் கார்டு மட்டும் இருந்தால் போதும்.. நேரடியாக வங்கி கணக்கில் ரூ.50,000 பெறலாம்...!

Sun Feb 2 , 2025
All you need is an Aadhaar card.. you can get Rs. 50,000 directly into your bank account.

You May Like