fbpx

தேர்வு மையத்துக்கும், பயிற்சி மையத்துக்கும் இடையே.. ‘பணம் கொடு, பேப்பர் எடு’ விளையாட்டு!! – கார்கே கண்டனம்!

நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் நீட் தேர்வு மூலம் 24 லட்சம் மருத்துவ மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாகக் காங்கிரஸ் தலைவர் கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். 

நடைபெற்ற முடிந்த நீட் தேர்வில் கருணை மதிப்பெண்கள் வழங்கியதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், கருணை மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு மட்டும் மறுதேர்வு நடத்த தேசிய தேர்வு தேர்வுகள் முகமை முடிவு செய்துள்ளது.  இது குறித்து கருத்து கூறியுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,  “வெறும் கருணை மதிப்பெண்கள் மட்டும் பிரச்னை கிடையாது.  தேர்வு மையத்துக்கும்,  பயிற்சி மையத்துக்கும் இடையே பரஸ்பர உறவு உருவாகி,  ‘பணம் கொடு, பேப்பர் எடு’ என்ற விளையாட்டு நடந்து வருகிறது.  

நீட் தேர்வுகளில் பல முறைகேடுகள் நடந்துள்ளன. ஆவணங்கள் கசிந்துள்ளன. ஊழல் நடந்துள்ளது. மோடி அரசின் நடவடிக்கையால் நீட் தேர்வெழுதும் 24 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.  நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். விசாரணைக்குப் பிறகு,  குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.  லட்சக்கணக்கான மாணவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என கார்கே கூறியுள்ளார்.

Read more ; ATM-களில் பணம் எடுக்க இனி கூடுதல் கட்டணம்!!

English Summary

Modi government has ruined the future of crores of youth in last 10 years

Next Post

போக்சோ வழக்கில் சிக்கிய எடியூரப்பா! வாரண்ட் பிறப்பித்தது கோர்ட்! எந்த நேரத்திலும் கைது!!

Thu Jun 13 , 2024
Former Karnataka CM BS Yediyurappa faced a POCSO case for alleged sexual assault on a minor during a meeting on February 2. Despite a notice, he missed a hearing due to a party meeting and sought time, but was denied bail, leading to a non-bailable warrant and potential CID arrest.

You May Like