fbpx

முக்கிய செய்தி: மேலும் 5 ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்ட “இஸ்லாமிய மாணவர் அமைப்பு..” – உள்துறை அமைச்சர் அமித்ஷா.!

சிமி இயக்கத்தின் மீதான தடையை மேலும் 5 வருடங்களுக்கு நீடித்து மோடி தலைமையிலான மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம் என்று அழைக்கப்படும் சிமி 1977 ஆம் ஆண்டு உத்திரபிரதேசம் மாநிலம் அலிகார் நகரில் தோற்றுவிக்கப்பட்டது.

இஸ்லாமிய மாணவர் இயக்கமாக கருதப்பட்ட இந்த அமைப்பு தீவிர மத கொள்கைகள் மற்றும் அடிப்படை வாதத்தை பின்பற்றுவதாக கூறி 2001 ஆம் வருடம் இந்திய அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி 2008 ஆம் ஆண்டு தடையை திரும்பப்பெற்றது. 2014 ஆம் வருடம் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பின்பு சிமி இயக்கம் மீண்டும் தடை செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 2019 ஆம் வருடமும் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக இந்த இயக்கத்தின் தடை 5 வருடங்களுக்கு நீடிக்கப்பட்டது. வருகின்ற பிப்ரவரி ஒன்றாம் தேதியுடன் இந்த தடை முடிவடைய இருக்கும் நிலையில் தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் சிமி இயக்கத்தின் தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவு செய்திருக்கும் அவர் ” பயங்கரவாதத்திற்கு எதிராக இரும்புக்கரம் கொண்ட நடவடிக்கைகளை எடுத்து வரும் பிரதமர் மோடியின் நடவடிக்கைகளுக்கு வலுப்படுத்தும் வகையில் இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பு மேலும் 5 ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்படுகிறது.பாரதத்தின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டை அச்சுறுத்தும் வகையில் பயங்கரவாதத்தை வளர்ப்பதிலும், அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதிலும் சிமி ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது” என்று உள்துறை அமைச்சகத்தின் அலுவலக ‘X’ வலைதளத்தின் பக்கத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

Next Post

பிஎம் கிசான் திட்ட பயனாளிகளுக்கு ஜாக்பாட்..!! கூடுதலாக ரூ.3,000..!! பிப்.1ஆம் தேதி வெளியாகும் அறிவிப்பு..?

Mon Jan 29 , 2024
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (பிஎம் கிசான்) என்ற திட்டமானது, கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள விவசாயிகளை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்றும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் மூலம் மத்திய அரசு சார்பில் விவசாயிகளுக்கு பண உதவி செய்யப்பட்டு வருகிறது. அதாவது, ஒரு தவணைக்கு 2,000 ரூபாய் வீதம், ஒரு ஆண்டுக்கு மொத்தம் 6,000 ரூபாய் வழங்கப்பட்டு […]

You May Like