fbpx

புயல் எதிரொலி… திங்கட்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை…! அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை மறுநாள் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகவுள்ள ‘மிக்ஜம்’ புயல், வடமேற்கு திசையில் நகர்ந்து, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர பகுதியை நோக்கி வரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது மேலும் வலுப்பெற்று நாளை புயலாக உருவாகி டிசம்பர் 4 ஆம் தேதி மாலை சென்னை – ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இந்த நிலையில் புயல் காரணமாக புதுச்சேரி, காரைக்கால் மற்றும் யானம் பகுதிகளில் வரும் 4-ம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. அதே போல புயல் எச்சரிக்கை பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அடிப்படை வசதிகளை மக்களுக்கு ஏற்படுத்தி தர வேண்டும், மக்களை நிவாரண மையங்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்கான சமையல் கூடங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Vignesh

Next Post

மிக்ஜாம் புயல் அலெர்ட்!… 100 கி.மீ. வேகத்தில் சுறாவளி காற்று வீசும்!… வானிலை ஆய்வு மையம்!

Sat Dec 2 , 2023
வங்கக்கடலில் மிக்ஜாம் புயல் வலுவடைந்து வரும் நிலையில், வரும் 5ம் தேதி நெல்லூர் – மசூலிப்பட்டினத்திற்கு இடையே கரையை கடக்கும் என்றும் அப்போது, 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் மிக்ஜாம் புயல் வலுவடைந்து வரும் நிலையில், வரும் 5ம் தேதி நெல்லூர் – மசூலிப்பட்டினத்திற்கு இடையே கரையை கடக்கும் என்றும் அப்போது, 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்றும் […]

You May Like