fbpx

மக்களே…! இந்தியாவில் நுழைந்த குரங்கு அம்மை வைரஸ்… இது தான் முக்கிய அறிகுறிகள்…!

இந்தியாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

குரங்கு அம்மை (Monkeypox) பாதிப்பு உள்ள ஒரு நாட்டிலிருந்து சமீபத்தில் இந்தியாவுக்குப் பயணித்த ஒரு இளம் ஆணுக்கு அந்த நோய் இருக்க கூடும் என சந்தேகிக்கப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தனிமைப்படுத்தப்பட்டு தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. அவருக்குக் குரங்கு அம்மை இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்த நோயாளியின் மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன. முறையான நெறிமுறைகளுக்கு ஏற்ப இந்த நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது. இது குறித்து பீதி அடையத் தேவை இல்லை. இதுபோன்ற நிலைகளைச் சமாளிக்க நாடு முழுமையாகத் தயாராக உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அறிகுறிகள்:

காய்ச்சல், தோலில் சிறு கொப்பளங்கள் (முகத்தில் தொடங்கி கை, கால், உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் வரை பரவக்கூடும்), தலைவலி, தசைபிடிப்பு, உடல் சோர்வு, தொண்டை புண் மற்றும் இருமல் ஆகும். கண் வலி அல்லது பார்வை மங்குதல், மூச்சுத்திணறல், நெஞ்சுவலி, மூச்சு விடுவதில் சிரமம், உணர்வு மாற்றம், வலிப்பு, சிறுநீர் வெளியேறும் அளவு குறைதல் ஆகும். அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளவர்கள்: ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள், இணை நோய் பாதிப்புடையவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள், ஓரின சேர்க்கை கொள்ளும் ஆண் இவர்களுக்கு தான் அதிகம் பரவ வாய்ப்பு உள்ளது.

பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: நீங்களோ அல்லது உங்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கோ குரங்கு அம்மை அறிகுறி தென்பட்டால், உங்களுக்கு அருகாமையில் உள்ள சுகாதார மையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். நோய் வாய் பட்டவர்கள் பயன்படுத்தும் படுக்கை உள்ளிட்ட எந்த பொருட்களையும் தொடுவதை தவிர்க்க வேண்டும்.

English Summary

Monkey measles virus entered India… these are the main symptoms

Vignesh

Next Post

தீவிரவாதம்!. பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்றால்!. அமைச்சர் ராஜ்நாத் சிங் அதிரடி பேச்சு!

Mon Sep 9 , 2024
'Ready For Dialogue With Pakistan If...': Rajnath Singh Makes Big Statement In J&K

You May Like