fbpx

தமிழகத்திலும் குரங்கு அம்மை பாதிப்பு..? அறிகுறிகளுடன் 4 பேர் மருத்துவமனையில் அனுமதி…

உலகளவில் குரங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. சுமார் 75 நாடுகளில் இருந்து 16,000 க்கும் மேற்பட்டோர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.. இந்தியாவில் கேரளாவில் 3 பேர், டெல்லியில் ஒருவர் என 4 பேருக்கு பாதிப்பு பதிவாகியுள்ளன.. குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மாநிலத்திற்குள் நுழைவதைத் தடுக்க விமான நிலையங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.. சர்வதேச விமான நிலையங்கள் மற்றும் கேரள எல்லையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஸ்கிரீனிங் நடைபெற்று வரும் நிலையில், மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும், குறிப்பாக தோல் புண்கள் உள்ளவர்களுக்கு குரங்கு காய்ச்சலுக்கான ஸ்கிரீனிங் தொடங்க வேண்டிய நேரம் இது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் குரங்கு அம்மை அறிகுறிகளுடன் 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.. வில்லுக்குறி பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு காய்ச்சல் மற்றும் கை, கால்களில் சிறு கொப்புளங்கள் ஏற்பட்டுள்ளது.. இதையடுத்து அரசு மருத்துவமனைக்கு சென்ற போது குரங்கு அம்மைக்கான அறிகுறிகளாக இருப்பதால் அவர்கள் தனிமைப்படுத்தப்படுட், தனி வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.. அவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக புனே ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.. ஆய்வு முடிவுகள் வந்த பின்னரே அவர்களுக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருக்கிறதா என்பது தெரியவரும்..

கேரளாவை ஒட்டி அமைந்துள்ள மாவட்டம் என்பதால் கன்னியாகுமரில் ஏற்கனவே பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.. கேரள மாநில எல்லையில், கேரளா செல்வோர், அங்கிருந்து வருவோர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.. இந்த சூழலில் கன்னியாகுமரியில் 4 பேர் குரங்கு அம்மை அறிகுறிகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்..

Maha

Next Post

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு..! உதகை நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Fri Jul 29 , 2022
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை ஆகஸ்ட் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உதகை மகளிர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் கடந்த 2017ஆம் ஆண்டு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ், வாளையார் மனோஜ், சயான் உள்ளிட்ட 11 பேர் ஈடுபட்ட நிலையில் அதில், முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட கனகராஜ், சேலம் அருகே சாலை விபத்தில் […]
கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு..! உதகை நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

You May Like