fbpx

UPI டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு…! மத்திய அரசு தகவல்..‌‌.!

இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 4 ஆண்டுகளில் 200 சதவீதம் அதிகரித்துள்ளது.

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க Rupay கடன் அட்டைகள் மற்றும் குறைந்த மதிப்பு Bhim UPI பரிவர்த்தனைகளுக்கு ஊக்கத்தொகைத் திட்டத்தை மத்திய அரசு இந்த நிதியாண்டில் அறிமுகம் செய்துள்ளது. மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக 2018-19 ஆம் நிதியாண்டிலிருந்து 4 ஆண்டுகளில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் 200 சதவீதம் உயர்ந்துள்ளது.

2018-19 ஆம் நிதியாண்டில் 2,326.02 கோடி என்ற எண்ணிக்கையில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் நடைபெற்றன. 2021-22 ஆம் நிதியாண்டில் இந்த எண்ணிக்கை 7,197.68 சதவீதமாக அதிகரித்துள்ளது. டிஜிட்டல் சேவைகளை தடையற்ற முறையில் வழங்க வங்கிகளும் புதிய தொழில்நுட்பங்களை உடனுக்குடன் ஏற்று செயல்படுத்துகின்றன.

Bhim UPI, யுபிஐ-123, ஆதார் பரிவர்த்தனை பாலம், ஏஇபிஎஸ் போன்ற பல முன்முயற்சிகள் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க மத்திய அரசு, ரிசர்வ் வங்கி, தேசிய பணப்பரிவர்த்தனைக் கழகம் மற்றும் வங்கிகளால் செயல்படுத்தப்படுகிறது என மத்திய நிதித்துறை இணையமைச்சர் பகவத் கிஷன்ராவ் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

பெண் குழந்தைகளுக்கான அசத்தல் சேமிப்பு திட்டம்.. ரூ.121 செலுத்தினால், ரூ.27 லட்சம் பெறலாம்..

Tue Feb 14 , 2023
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி பல்வேறு சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.. எல்ஐசி பாலிசிகள் உங்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்கின்றன. அந்த வகையில் சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் ஒரு திட்டத்தைக் கொண்டுள்ளது. எனவே உங்கள் பெண் குழந்தையின் கல்வி மற்றும் திருமணத்திற்காக நீங்கள் எடுக்கக்கூடிய கொள்கைகள் உள்ளன. அப்படிப்பட்ட ஒரு பாலிசிதான் எல்ஐசி கன்யாதன் பாலிசி. இந்த பாலிசி உங்கள் மகளின் திருமணம் மற்றும் […]

You May Like