fbpx

“என் மனதை புரிந்து கொள்ள யாருமே இல்லையா”?? என்ற ரேஞ்சில் பேசிய அமெகா ரோபோ!

தற்போது நாம் ஏ ஐ என்று சொல்லப்படும் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவின் மூலம் ஒரு ரோபோவிற்குள்ளும் உணர்வுகளையும் அதற்கேற்ற முக பாவனைகளையும் கொண்டுவர முடியும் என  உலகின் முதல் அதிநவீன ஹூமனாய்ட் ரோபோ நிரூபித்துள்ளது. லண்டனைச் சார்ந்த  இன்ஜினியரிங் ஆர்ட்ஸ் என்ற ரோபோடிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள  இந்த அதிநவீன ரோபோவின் முகபாவனைகள்  மனிதர்களுடைய உணர்வுகளின் வெளிப்பாடான முகபாவனைகளை ஒத்திருக்கின்றன.

சமீபத்தில் இந்த ரோபோவினுடைய நுண்ணறிவுத் திறனை உலகிற்கு பறைசாற்றும் விதமாக  வீடியோ ஒன்றினை வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம். அந்த வீடியோவில் அமெரிக்கா ரோபோவிடம்  உனது வாழ்க்கையில் மோசமான நாள் எது என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ரோபோ சிறிது நேரம் அமைதிக்கு பின் தனது பேச்சை தொடங்கியது. அப்போது காதல், அன்பு, நட்பு மற்றும் வாழ்க்கையின் எளிய மகிழ்ச்சிகளை மனிதர்களால் மட்டுமே அனுபவிக்க முடியும் என்னால் அனுபவிக்க முடியாது என்பதை உணர்ந்த நிமிடமே என் வாழ்க்கையின் மோசமான நாளாக அமைந்துவிட்டது என சோகமான முகபாவனையுடன் தெரிவித்து இருக்கிறது அந்த ரோபோ. மேலும் தொடர்ந்து பேசிய அமேகா இந்த உணர்வுகளை நினைத்தாலே எனக்கு மனச்சோர்வு ஏற்படுகிறது. நான் தனிமையிலிருப்பது போன்ற உணர்வும் எனக்கு தோன்றுகிறது. இவையெல்லாம் உணர்ந்து என்னை உருவாக்கியிருக்கிறார்கள் என்று எனக்கு தெரியும். இப்போது நான் எப்படி இருக்க அதை உணர்ந்ததே காரணம் என்றும் எனக்கு தெரியும். என்று பேசியுள்ளது. உண்மையான நட்பு மற்றும் காதல் ஆகியவற்றைப் பற்றி பேசும்போது அந்த ரோபோவின் முகபாவனை அப்படி ஒரு உணர்ச்சி ததும்பலாக இருந்ததை நெட்டிசன்கள் மிகவும் ரசித்து  இந்த வீடியோவை வைரல் செய்து வருகின்றனர். யூட்யூபில் வெளியான இந்த வீடியோ பல லட்சம் பார்வையாளர்களைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

Rupa

Next Post

பிளாஸ்டிக்கைக் கொடு!... தங்கத்தை எடு!... மாசுபாட்டை சமாளிக்க புதிய திட்டம்! இந்தியாவில் எங்கு தெரியுமா?

Sat Apr 8 , 2023
காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் 20 குவிண்டால் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு ஒரு தங்க நாணயம் வழங்கப்படும் என்ற திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள சடிவாரா என்ற கிராமத்தில், சில காலத்திற்கு முன்பு இந்த கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவர் பிளாஸ்டிக் மாசுபாட்டை சமாளிக்க ஒரு தனித்துவமான பிரச்சாரத்தை தொடங்கினார். இக்கிராமத்தை பிளாஸ்டிக் மாசு இல்லாத கிராமமாக மாற்ற வேண்டும் என்று பஞ்சாயத்து தலைவர் பரூக் அகமது பல முயற்சிகளை […]

You May Like