fbpx

உரிமம் இல்லாத பார்கள் மூலம் பல்லாயிரம் கோடி முறைகேடு – இபிஎஸ் குற்றச்சாட்டு

உரிமம் இல்லாத பார்கள் மூலம் பல்லாயிரம் கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், முதல்வரின் குடும்பத்துக்குப் பணம் சென்றதாக செய்திகள் வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சென்னையில் எதிர்க்கட்சித தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியார்களை சந்திதார். அப்போது பேசிய அவர்,”மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளதாக செய்திகள் வந்துள்ளது. போக்குவரத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் பணம் பெற்றது தொடர்பாக ஏற்கனவே அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டதற்கு காரணமான வழக்கு தற்போது பதிவு செய்ததல்ல. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் பார்களுக்கு டெண்டர் விடப்படவில்லை. 2 ஆண்டுகளாக முறைகேடாக பார்கள் செயல்பட்டு வருகின்றன. அரசுக்கு வருகின்ற வருவாய் திமுகவினர் மூலமாக மேலிடத்திற்கு சென்று கொண்டு இருப்பதாக செய்திகள் வந்துள்ளது. இது குறித்து ஆளுநரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளில் முறைகேடாக பல்லாயிரக்கணக்கான கோடிகளை கொள்ளையடித்துள்ளனர். இப்படி பல கோடி ரூபாய் முதல்வரின் குடும்பத்துக்குச் சென்றதாக பத்திரிகை செய்திகள், வெளி வட்டார செய்திகள் வந்து கொண்டுள்ளன. செந்தில்பாலாஜி உத்தமர் போல முதல்வர் பேசுகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார்.மனித உரிமை குறித்து பேசுவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தகுதி இல்லை. ஆதாரம் இருந்ததால்தான் தலைமைச் செயலகத்தில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.அமைச்சர் பதவியை செந்தில்பாலாஜி ராஜினாமா செய்ய வேண்டும். அமைச்சர் செந்தில் பாலாஜி தார்மிக அடிப்படையில் ராஜினாமா செய்ய வேண்டும்.” என்று கூறினார்.

Maha

Next Post

காதல் திருமணம்..!! பிரித்து வைத்த பெற்றோர்..!! மீண்டும் திருமணம்..!! கணவர் கையில் ராக்கி..!! நடந்தது என்ன..?

Wed Jun 14 , 2023
ராஜஸ்தான் மாநிலம் பாலேசார் பகுதியைச் சேர்ந்தவர் இளம்பெண் தருணா சர்மா. இவர் தன்னுடன் பள்ளியில் படித்த சுரேந்திரா சங்கலா என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனாலும், காதலில் உறுதியாக இருந்த இருவரும் திருமணம் செய்து கொண்டு சொந்த ஊரில் இருந்து வெளியேறி தலைமறைவாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில், திருமணமான 10ஆவது நாளிலேயே தம்பதியை பெண் […]

You May Like