மும்பை நகரில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மும்பை மாநகர் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று மாலை 6 மணி அளவில் மும்பை காவல்துறை கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு மர்ம நபரிடமிருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று வந்திருக்கிறது. அதில் மும்பையின் முக்கிய பகுதிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்த நபர் தனது அழைப்பை உடனடியாக துண்டித்திருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கைகளில் இறங்கினார் .
இதனைத் தொடர்ந்து மும்பையின் நகரின் முக்கிய பகுதிகள் முதல் அனைத்து பகுதிகளும் தீவிர வெடிகுண்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. எனினும் சந்தேகத்திற்கிடமான எந்த நடவடிக்கையோ வெடிகுண்டுகளோ கண்டுபிடிக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து மீண்டும் அமைதி நிலைக்கு திரும்பியது. மேலும் காவல்துறைக்கு போன் செய்து மிரட்டல் விடுத்த மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த வெடிகுண்டு மிரட்டல் சம்பவத்தால் நகரில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது மேலும் புத்தாண்டு கொண்டாட்டங்களை சீர்குலைப்பதற்காக மர்ம நபர்கள் இது போன்ற மிரட்டல் கொடுத்திருக்கலாம் எனவும் காவல்துறை திறப்பு தெரிவித்துள்ளது.