fbpx

டாக்சி ஓட்டுனரால் விமானத்தை தவற விட்ட நபர்.! உபர் நிறுவனத்திற்கு அபராதம்.!

வெளியே செல்ல ஆட்டோ, டாக்சி தேடுவதை விட தற்போது எங்கிருந்து வேண்டுமானாலும் செயலிகள் மூலம் புக் செய்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நுகர்வோர் ஒருவர் நீதிமன்றத்திற்கு சென்று புகார் அளித்திருக்கிறார். அதன் படி வழக்கறிஞர் கவிதா ஷர்மா என்பவர் மும்பை டோம்பிவிலியில் வசித்து வந்த நிலையில், 2018ம் ஆண்டு மும்பையில் இருந்து சென்னைக்கு விமானம் வழியாக செல்வதற்கு டிக்கெட் பதிவு செய்திருந்தார்.

Uber ஆப் மூலம் வழக்கறிஞர் கவிதா ஷர்மா கேப் புக் செய்திருக்கிறார், டோம்பிவிலியில் உள்ள சத்ரபதி விமான நிலையத்துக்கு செல்ல 36 கி.மீ தொலைவு இருக்கும் நிலையில் பிற்பகல் 3.29 மணிக்கே புக் செய்துள்ளார். பல முறை தொடர்பு கொண்டும் எடுக்காமல் இருந்ததை தொடர்ந்து மேலும் அந்த டிரைவர் 14 நிமிடங்களுக்கு பின்பே லொகேஷனுக்கு வந்துள்ளார்.

அதுமட்டுமின்றி மாற்றுப்பாதையில் சென்றிருக்கிறார். மேலும் கேஸ் நிரப்புவதாக கூறி இன்னும் தாமதம் ஆகியதுடன் மாலை 5:50 விமானத்திற்கு 5:23 மணிக்கு விமான நிலையத்தில் கொண்டு விட்டுருக்கிறார்.

563 ரூபாய் என புக் செய்யும் போது காண்பித்த கட்டணம் இறங்கும் போது 703 ரூபாயாக அதிகரித்திருக்கிறது.இதனால் பெருத்த கோபமடைந்த அந்த வழக்கறிஞர் கவிதா முதலில் தானேவில் உள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்திற்கு சென்று ஊபர் நிறுவனத்துக்கு நோட்டீஸ் விடுத்திருக்கிறார்.

இதனை தொடர்ந்து, இந்த வழக்கு மும்பை நுகர்வோர் நீதிமன்றத்தில் மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு ஊபர் நிறுவனத்திலிருந்து பாதிக்கப்பட்ட வழக்கறிஞர் கவிதாவிற்கு வழக்கு விசாரணைக்கும் மன உளைச்சல் ஏற்பட்டது என செலவு உட்பட 20,000 ரூபாய் அபராதமாக வழங்க ஊபருக்கு உத்தரவிட்டிருக்கிறது.

Baskar

Next Post

திருமண விருந்தில் ரசகுல்லாவுக்கு அடிதடி.. பறிபோன ஒரு உயிர்.. அலட்சியத்தில் போலீஸ்.!

Sun Oct 30 , 2022
உத்தர பிரதேசம் அருகே ஆக்ராவை அடுத்த மொஹல்லா ஷைக்கான் பகுதியில் உஸ்மான் என்பவர் தன்னுடைய மகளின் திருமணத்தை நடந்தி இருக்கிறார்.பந்தியில் வைப்பதற்காக இருக்கும் ரசகுல்லா தீர்ந்ததை தொடர்ந்து மணமகள், மணமகன் ஆகிய இரு தரப்பினரிடையே வாய்த்தகராக மற்றும் கைகலப்பாக முடிந்திருக்கின்றது. இதில் நடந்த தகராறில் சன்னி என்ற 22 வயது இளைஞர் ஒருவர் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள ஆக்ராவின் சரோஜினி நாய்டு மருத்துவக் கல்லூரியில் உள்ள மருத்துவமனைக்கு […]

You May Like