fbpx

இளம்பெண் கொலையில் ஏற்பட்ட திடீர் திருப்பம், இவர்தான் கொலையாளியா…? அதிரடியாக கைது செய்த காவல்துறையினர்…!

உதகை மாவட்டம், எடக்காடு பாதகண்டியைச் சேர்ந்த, ராமநாதன், கல்யாணி தம்பதியினரின் இரண்டாவது மகள் தான் விசித்திரா. இவர் பட்டப்படிப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.

விசித்திரா தன்னுடன் படித்து வந்த மஞ்சூர் சிவசக்தி நகரை சேர்ந்த ஜெயசீலன் என்பவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில்தான். விசித்ராவிற்கு அவருடைய வீட்டில் இருப்பவர்கள் மாப்பிள்ளை பார்க்க தொடங்கினார்கள்.

முன்னதாக, விசித்ரா, ஜெயசீலன் உள்ளிட்ட இருவரும். நெருங்கி பழகி வந்த நிலையில், ஜெயசீலன் நடவடிக்கையில், மாற்றம் ஏற்பட்டதால், அது பிடிக்காமல் ஒரு கட்டத்தில், விசித்திரா ஜெயசீவனுடன் பழகுவதை நிறுத்திவிட்டார். இதற்கு நடுவே தான், விசித்திராவிற்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்கப்பட்டது.

இந்த விவரம் அறிந்து ஆத்திரம் கொண்ட ஜெயசீலன், விசித்ராவை தேடி, நேரில் வந்து, தனியாக பேச வேண்டும் என்று வீட்டின் அருகே அழைத்துசென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து, ஆத்திரம் கொண்ட ஜெயசீலன்,விசித்திராவின் கழுத்தை கயிற்றால் நெரித்து, கொலை செய்திருக்கிறார்.

இந்த நிலையில் தான், வீட்டின் பின்புறம் இருந்த குடிநீர் தொட்டியில் இருந்து, விசித்திரா பிணமாக மீட்கப்பட்டார்.இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், விசித்திராவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதலில் சந்தேகம் மரணம் என்று வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில், விசித்திர காதலித்து வந்ததும்,பின்பு காதலனை விட்டு விலக முயற்சி செய்ததும், அதன் காரணமாக, விசித்திராவை ஜெயசீலன் கொலை செய்து, தண்ணீர் தொட்டியில் மறைத்து வைத்தார் என்ற உண்மையும் தெரிய வந்தது.

ஆகவே, காவல்துறையினர் ஜெயசீலனை கைது சிறையில் அடைத்துள்ளனர். திருமணம் செய்து கொள்ள மறுத்த தன்னுடைய காதலியை கயிற்றால், கழுத்தை நெரித்து, கொலை செய்த சம்பவம் உதகையில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபல கிளாமர் நடிகை..!! அப்படினா அது கண்டிப்பா நடக்கும்..!! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!!

Tue Sep 5 , 2023
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிகழ்ச்சியானது 6 சீசன்களை கடந்து விட்ட நிலையில், தற்போது 7-வது சீசன் தொடங்க இருக்கிறது. சமீபத்தில் இந்த சீசனுக்காக கமல் நடித்த ப்ரோமோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்திருந்தது. அதுமட்டுமின்றி, இந்த சீசனில் 2 வீடுகள் இருக்கப் போவதாக ஏற்கனவே தகவல் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. அந்தவகையில், செப்டம்பர் 24ஆம் தேதி அல்லது அக்டோபர் 7ஆம் […]

You May Like