fbpx

அட கடவுளே..‌! ஜம்முவில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல்… 40 நாட்களில் மட்டும் 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..‌!

ஜம்மு காஷ்மீரில் வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சலால் கடந்த 40 நாட்களில் மட்டும் 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 40 நாட்களில் மட்டும் 15-க்கும் மேற்பட்ட நபர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த காய்சல் பெரும்பாலும் குழந்தைகள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

தொடர் உயிரிழப்புகளை ஏற்படுத்தி அச்சுறுத்தி வரும் இந்த மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்காக அம்மாநில அரசு மருத்துவ குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்த குழு, மர்ம காய்ச்சல் பாதித்துள்ளள்ள பகுதிகளில் உணவு, குடிநீர் உள்ளிட்டவற்றின் மாதிரிகளை ஆய்வு செய்தனர். அதன் முடிவாக தொற்றுநோய் பரவல் இல்லை என கண்டறிந்துள்ளனர். தொடர்ந்து இந்த மர்ம காய்ச்சலால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக, காவல் கண்காணிப்பாளர் வஜகத் ஹுசைன் தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபர்கள் என்ன காரணத்தினால் மரணம் அடைந்தார்கள் என்கின்ற அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Vignesh

Next Post

மெய்சிலிர்க்க வைக்கும் ஆனைமலை நரசிம்மர்.. இந்த கோவில் எப்படி உருவானது தெரியுமா..?

Fri Jan 17 , 2025
Mesmerizing Anaimalai Narasimha.. Do you know how this temple came into being..?

You May Like