ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியில் பைக்கில் சென்றவர் தலை துண்டிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி புறநகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் கண்ணில் மிளகாய் பொடியை தூவி தலையில் வெட்டி கையோடு எடுத்து சென்ற சம்பவம் நடந்துள்ளது.
இதனை தொடர்ந்து இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் வனப்பகுதியில் தலையில்லாத உடல் இருப்பதையும், அருகில் மோட்டார் சைக்கிள் இருப்பதையும் பார்த்தனர். இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி, வழக்கு பதிவு செய்து, மதனப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார், படுகொலை செய்யப்பட்டவர் யார்? அவரை கொன்றது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றது.