நாகை மாவட்டம் வடபகுதி ஊரைச் சேர்ந்தவர், கணவன் மணிகண்டன். மனைவி கிருத்திகா. இந்த தம்பதியினருக்கு குழந்தை ஒன்று உள்ளது. இதற்கு இடையே கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக, இரண்டு ஆண்டுக்கு முன்பு கணவர் மணிகண்டனை பிரிந்து கிருத்திகா அவரது பெற்றோர்களுடன் வசித்து வந்துள்ளார். கிருத்திகா சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவருடன் நட்பாக பழகி வந்துள்ளார். இந்த நட்பானது நாளடைவில் இருவருக்கிடையே கள்ளக்காதலாக மாறி, கிருத்திகா மற்றும் கிருஷ்ணர் இருவரும் காதலிக்க ஆரம்பித்துள்ளனர்.
இதனால் அடிக்கடி போன் மூலமும், நேரடியாகவும் பேசி பழகி உள்ளனர். இந்த சம்பவம் சிறிது நாட்களுக்கு முன்பு கிருத்திகா பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. மேலும் கிருத்திகாவின் பெற்றோர் இந்த கள்ளக்காதலை பிடிக்காமல் கிருத்திகாவை கண்டித்துள்ளனர். இதனை கிருத்திகா கிருஷ்ணனிடம் போன் மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். இதனால் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு இருவரும் தங்களது வீட்டை விட்டு வெளியேறி கோயம்புத்தூர் சென்றுள்ளனர்.
அங்கு லாட்ஜில் ரூம் எடுத்து தங்கி இருவரும் உல்லாசமாக இருந்துவிட்டு, கூல் ட்ரிங்க்ஸில் விஷம் கலந்து இருவரும் குடித்துள்ளனர். இதனிடையே இவர்கள் இருவரும் ரூமிற்கு வாடகை கொடுக்காமல் இருந்துள்ளனர். அதனால், ரூம் பொறுப்பாளர் வாடகை பணம் கேட்பதற்காக சென்றுள்ளார். அங்கு சென்று பார்த்த போது இருவரும் மயங்கி இருந்தனர். இதைக் கண்ட லாட்ஜ் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்து இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளார். அங்கு அவர்களுக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கிருத்திகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கள்ளக்காதலன் கிருஷ்ணன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பகுதி செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.