fbpx

மகள், மாமியார் வித்தியாசமில்லாமல் பாலியல் தொல்லை.! வெட்டிக்கொன்ற உறவினர்கள்.!

நாகை மாவட்டம் திருமருகல் பகுதியை அடுத்துள்ள திருக்கண்ணபுரம் பகுதியை சேர்ந்தவர் 50 வயதான கூலிதொழிலாளி அரவிந்தன். இவர் ஏற்கனவே, குற்ற வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தான் விடுதலை செய்யப்பட்டார்.

இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்களில் மகன் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பும், மகள் பத்தாம் வகுப்பும்படித்து வருகின்றனர். இவர்களுடன் தொழிலாளியின் மாமியாரும் வசித்து வந்தார்.

அரவிந்தன் தன் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயற்சித்துள்ளார். மேலும், தினமும் வீட்டில் இருந்த பொருட்களை எடுத்து சென்று அரவிந்தன் விற்பனை செய்துக்கொண்டிருந்தார். அதில் கிடைக்கும் பணத்தில் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவி, மாமியார், குழந்தைகளைதாக்கி வந்துள்ளார்.

அவ்வாறு இரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த தொழிலாளி, தனது பெற்ற மகள் என்றும் பாராமல் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மனைவி தட்டிக்கேட்டார். இதனால், அவரது மனைவி, மாமியார், மகனையும் அவர் தாக்கி குடும்பத்தினரை அடித்து வீட்டில் இருந்து விரட்டி உள்ளார்.

தொடர்ந்து அவரது மனைவி தனது தாயார் மற்றும் குழந்தைகளை அழைத்துக்கொண்டு திருவாரூரில் உள்ள தனது அக்காள் வீட்டுக்கு சென்று விட்டார். இச்சம்பவத்தினால் ஆத்திரமடைந்த அவரது மனைவி மகன், அக்கா மற்றும் அக்காவின் கணவர், மகன், நண்பர் ஆகிய 6 பேரும் நள்ளிரவில் மீண்டும் தனது கணவர் வீட்டுக்கு வந்து வீட்டின்வாசலில் தூங்கி கொண்டிருந்த தொழிலாளியை அரிவாளால் சரமாரியாக வெட்டியும், உருட்டுக்கட்டையால்தாக்கியும் கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருக்கண்ணபுரம் போலீசார்சம்பவ இடத்துக்கு சென்று தொழிலாளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசுமருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் . இந்த புகாரின்பேரில் திருக்கண்ணபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரவிந்தன் மனைவி, மகன் மற்றும் மனைவியின் அக்காள், அவரதுகணவர், மகன், நண்பர் ஆகிய 6 பேரையும் கைது செய்தனர்.
இச்சம்பவம் பெரும் பரபரப்பை அப்பகுதியில் ஏற்படுத்தி உள்ளது.

Baskar

Next Post

தீபாவளி..!! சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்..!! சென்னையில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கம்..!!

Thu Oct 20 , 2022
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று தீபாவளி பண்டிகையைக் கொண்டாடிவிட்டு, மீண்டும் சென்னைக்கு திரும்புவதற்கு வசதியாக, சென்னையில் இருந்து அக்டோபர் 21 – 23 வரையிலும், அக்டோபர் 25 – 27 வரையிலும் சிறப்புப் பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு, அக்டோபர் 24ஆம் தேதி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (டி.என்.எஸ்.டி.சி) மற்றும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (எஸ்.இ.டி.சி) சென்னையில் […]

You May Like