fbpx

சைனிக் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான தேசிய நுழைவுத்தேர்வு…! முழு விவரம்

இதுதொடர்பாக தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்ட செய்திக்குறிப்பில்; நாடு முழுவதும் 33 சைனிக் பள்ளிகள் அமைந்துள்ளன. இவற்றில் 2024-25-ம் கல்வியாண்டில் 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான தேசிய நுழைவுத்தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி 21-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நுழைவுத் தேர்வில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு, https://sainikschool.ncog.gov.in/ என்ற இணையதளம் வழியாக டிச.16-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் aissee@nta.ac.in என்ற மின்னஞ்சல் வழியாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.

இன்றைய இளைஞர்களை நாளைய பொறுப்புள்ள குடிமக்களாக மாற்றுவதன் மூலம் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அரசாங்கத்துடன் கைகோர்த்து செயல்பட தனியார் துறைக்கு இது ஒரு வாய்ப்பை வழங்குகிறது. மேற்குறிப்பிட்ட 23 அங்கீகரிக்கப்பட்ட புதிய சைனிக் பள்ளிகளின் மாநில மற்றும் யூனியன் பிரதேச வாரியான பட்டியலை https://sainikschool.ncog.gov.in/ என்ற இணையதளத்தில் காணலாம். இந்த புதிய சைனிக் பள்ளிகள், அந்தந்த கல்வி வாரியங்களுடன் இணைக்கப்படுவதைத் தவிர, சைனிக் பள்ளிகள் சங்கத்தின் கீழ் செயல்படும்.

Vignesh

Next Post

நீச்சல் குளத்தில் குளிக்காதீர்கள்!… மூக்கில் நுழைந்து மூளையை தின்னும் அமீபா!… 10 வயது சிறுமி பலியான அதிர்ச்சி!

Thu Nov 30 , 2023
கொலம்பியாவில் மூக்கு வழியாக நுழைந்து மூளையை உண்ணும் அமீபா என்ற விநோத நோய்க்கு 10 வயது சிறுமி பலி ஆகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலம்பியாவைச் சேர்ந்தவர் டாடியானா கோன்சாலஸ். இவரது 10 வயது மகள் ஸ்டெபானியா வில்லமிசார். இவர் குடும்பத்தினருடன் விடுமுறைக்குச் சென்றபோது, நீச்சல் குளம் ஒன்றில் குளித்துள்ளார். இந்த நிலையில், அடுத்த சில நாட்களில் அவருக்கு காதுவலி, காய்ச்சல் மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது. இது சில நாட்களில் […]

You May Like