fbpx

அடடே நெல்லிக்காயை தேனுடன் சேர்த்து சாப்பிடுவதில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா…..? நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்…..?

பொதுவாக நெல்லிக்காயிலும் சரி, தேனிலும் சரி, அதிக அளவிலான நன்மைகள் இருப்பதாக நாம் கேள்விப்பட்டிருப்போம். அதிலும் நெல்லிக்காய் பல்வேறு விதமான நன்மைகளை உடலுக்கு வழங்கும்.

ஆனாலும், அதனை பொதுமக்கள் யாரும் பெரிதாக விரும்பி சாப்பிடுவதில்லை. நெல்லிக்காயில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்திருப்பதாக ஆயுர்வேத மருத்துவர்கள் பலர் தெரிவித்திருக்கிறார்கள்.

தற்போது நெல்லிக்காய் மற்றும் தேன் உள்ளிட்டவற்றை கலந்து சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் பற்றி நாம் காணலாம்.

மாதுளைப்பழத்தை விட நெல்லிக்காயில் 27 மடங்கு அதிக சத்துக்கள் உள்ளதாக நிபுணர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. நெல்லிக்காயில் ஆன்டிவைரஸ் மற்றும் ஆன்ட்டி மைக்ரோபியல் பண்புகள் நிறைந்திருக்கின்றன.

இந்த நெல்லிக்காய் உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. அதோடு, உடலில் இருக்கின்ற அதிகப்படியான கொழுப்பு சத்துக்களை குறைக்கிறது. மேலும் ஆண்களின் ஆற்றலை அதிகரிப்பதில் இந்த நெல்லிக்கனி முக்கிய பங்கு வைப்பதாக சொல்லப்படுகிறது.

அதோடு, நெல்லிக்காய் இதய நோய் மற்றும் நீரிழிவு நோயை முற்றிலுமாக தடுக்கிறது. நெல்லிக்காய் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. அதோடு, நினைவாற்றலையும் அதிகரிக்கச் செய்கிறது. முடிக்கு சரியான ஊட்டச்சத்தை வழங்குகிறது. பொடுகு குறித்த பல்வேறு பிரச்சனைகளுக்கு இந்த நெல்லிக்காய் மிகவும் பயனுள்ளதாக அமையும்.

நெல்லிக்காய் சாப்பிடுவதால் தோல் புள்ளிகள் மற்றும் வயது குறித்த சுருக்கங்களை நாம் தடுக்கலாம். நெல்லிக்காயை அரைத்து, அதில் சற்றே மஞ்சள் மற்றும் நல்லெண்ணெய் போன்றவற்றை கலந்து உடலில் பூசிக்கொண்டு, அதன் பிறகு நீராடினால் சருமம் இயற்கையாக அழகுடன் இருக்கும் என்கிறார்கள். இரவு உணவுக்கு பின்னர் ஒரு டீஸ்பூன் நெல்லிக்காய் பொடியை தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் அமிலத்தன்மை உடலில் நிரந்தரமாக இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

Next Post

மக்களவையில், எதிர்க்கட்சி எம்.பி.க்களை "உங்கள் வீட்டிற்கு அமலாக்கத்துறை வரும்" என மிரட்டிய மீனாட்சி லேகி..!

Fri Aug 4 , 2023
பாஜக அரசை எதிர்த்து கேள்வி கேட்பவர்களிடம் ஆமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்பட பல எதிர்கட்சித்தலைவர்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில் அதை உறுதிப்படுத்தும் விதமாக வெளியுறவு மற்றும் கலாச்சாரத்துறை இணை அமைச்சர் திருமதி மீனாட்சி லேகி, மக்களவையிலையே எதிர்க்கட்சி எம்.பி.க்களை “அமலாக்கத் துறை வரும்” என மிரட்டியுள்ள வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவசர சட்டத்திற்கு மாற்றாக டெல்லி யூனியன் பிரதேச ஐஏஎஸ், ஐபிஎஸ் […]

You May Like