fbpx

எதிர் பாராத ட்விஸ்ட்… துணை ஜனாதிபதி பதவிக்கு மேற்கு வங்க ஆளுநரை களம் இறக்கிய பாஜக…! இவர் பின்னணி என்ன தெரியுமா…?

இந்திய துணை ஜனாதிபதி பதவிக்கு ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக ஜக்தீப் தங்கரை சனிக்கிழமை அறிவித்தது. ஜக்தீப் தங்கர் தற்போது மேற்கு வங்க ஆளுநராக பணியாற்றி வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக தலைவர் ஜேபி நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங், பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் கலந்துகொண்ட பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

Image

இது குறித்து பிரதமர் மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “ஜக்தீப் தன்கர் அவர்கள் தனது பணிவிற்கு பெயர் பெற்றவர். அவர் ஒரு சிறந்த சட்ட சேவகர், சட்டமன்ற மற்றும் கவர்னர் பதவியை வகித்தவர். அவர் எப்போதும் விவசாயிகள், இளைஞர்கள் நலனுக்காக உழைத்துள்ளார். பெண்கள் மற்றும் ஒதுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக இருக்க கூடியவர். அவர் எங்களின் துணை ஜனாதிபதி வேட்பாளராக இருப்பதில் மகிழ்ச்சி என கூறியுள்ளார்.

ஜக்தீப் தங்கர் ஒரு மூத்த அரசியல்வாதி ஆவார். அவர் 1993 இல் ராஜஸ்தானின் கிஷன்கரில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார், மேலும் ராஜஸ்தான் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் ஜெய்ப்பூரில் தலைவராக பணியாற்றினார். ஜூலை 30, 2019 அன்று, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவரை மேற்கு வங்க ஆளுநராக நியமித்தார். இதற்கிடையில், இந்திய துணை ஜனாதிபதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடைபெறும் மற்றும் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 19 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: தமிழகமே… கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை…! நாளைக்குள் இதை செய்யவில்லை என்றால் பணம் கிடையாது…!

Vignesh

Next Post

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்..! எங்கெங்கு தெரியுமா?

Sun Jul 17 , 2022
தமிழகத்தில் நீலகிரி உள்பட 5 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 17, 18ஆம் தேதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் நீலகிரி, கோவை (மலைப்பகுதிகள்), தேனி, திண்டுக்கல் […]

You May Like