fbpx

“டாஸ்மாக் போயிட்டு, மோட்டார் சைக்கிள்ல ஏன் வந்தீங்க?” என்று கேட்ட மனைவி!மனம் உடைந்த கணவர் செய்த அதிர்ச்சி சம்பவம் !

கடலூர் மாவட்டத்தில் மனைவி திட்டியதால் மனம் உடைந்த கணவர் மாடியில் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது . கடலூர் மாவட்டம் மேல புவனகிரியில் உள்ள பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் ராமமூர்த்தி இவரது மனைவியின் பெயர் இந்திராவதி. இந்த தம்பதிக்கு மூன்று மகன்கள் உள்ளனர். அப்பகுதியில் கோழி இறைச்சி கடை நடத்தி வந்தார் ராமமூர்த்தி. இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் சென்று மது அருந்தி வந்திருக்கிறார் ராமமூர்த்தி. இது தொடர்பாக அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. மது அருந்திவிட்டு ஏன் மோட்டார் சைக்கிளில் வரவேண்டும் பேருந்தில் வர வேண்டியதுதானே என கணவரை கண்டித்துள்ளார் இந்திராவதி. இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் சண்டை நடந்ததாக தெரிகிறது. இதனால் மணமுடைந்த நிலையிலேயே காணப்பட்டிருக்கிறார் ராமமூர்த்தி.

இதனைத் தொடர்ந்து தனது வீட்டு மாடிக்கு சென்ற ராமமூர்த்தி நீண்ட நேரம் ஆகியும் கீழே வரவில்லை. மேலே சென்ற அவரை நீண்ட நேரமாகியும் காணாததால் அங்கு சென்று பார்த்த போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தெரிந்துள்ளது. இதனையடுத்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறை தீவிரமான விசாரணை நடத்தி வருகிறது. மனைவி திட்டியதால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Rupa

Next Post

எங்களுக்கு தெரியாத வீடு கிடையாது....! நம்பி சென்ற பெண்ணை நாசம் செய்த கணவரின் நண்பர்கள்! மத்திய பிரதேசத்தை உலுக்கிய சம்பவம்!

Tue Feb 21 , 2023
மத்திய பிரதேச மாநிலத்தில் கணவரை இழந்த பெண் ஒருவரை மறைந்த கணவரின் நண்பர்கள் நான்கு பேர் சேர்ந்து கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூர் நகரைச் சார்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் தனது மனைவி மற்றும் மகளுடன் வசித்து வந்தார். மதுப்பழக்கத்திற்கு அடிமையான அவருக்கு நண்பர்கள் அதிகம். மேலும் தன்னை விட வயதில் குறைந்த நபர்களை நட்பாக்கி கொள்வது […]

You May Like