fbpx

‘என்னையே அடிக்கிறீங்களா…’?ஹைதராபாத் அருகே பேருந்துகளுக்கு தீ வைத்த டிரைவர்!

ஹைதராபாத் நகரின் குக்கட் பள்ளி என்ற இடத்தில் பேருந்துகளுக்கு தீ வைத்த வழக்கில் அந்த ட்ராவல்ஸில் பணிபுரிந்த டிரைவரை காவல்துறை கைது செய்து இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் உள்ள குக்கட் பள்ளி என்ற இடத்தில் பாரதி டிராவல்ஸ் இன்றைய நிறுவனத்திற்கு சொந்தமான மூன்று பேருந்துகள் தீப்பற்றி எரிந்ததாக போலீசாருக்கு புகார் வந்தது. இதனைத் தொடர்ந்து குக்கட் பள்ளி உதவி ஆணையர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார் இந்த வழக்கை விசாரித்தனர். வழக்கு விசாரணையில் அந்த ட்ராவல்ஸ் இல் தங்கி பணிபுரிந்து வந்த டிரைவர் தான் மூணு பேருந்துகளுக்கும் தீ வைத்திருக்கிறார் என்று தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து காவல்துறை அவரை கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகிறது. காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் பாரதி ட்ராவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான கிருஷ்ணா ரெட்டி மற்றும் அவரது மருமகன் யஸ்வந்த் ரெட்டி ஆகியோர் இந்த ஓட்டுனரை பணிக்குச் செல்லுமாறு கட்டாயப்படுத்தி இருக்கின்றனர் ஆனால் அவர், தான் சொந்த ஊர் சென்று வர வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதனால் அவர்கள் இருவரும் சேர்ந்து ஓட்டுநரை தாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக கோபமடைந்த பேருந்து ஓட்டுநர் இரவு 11 மணி அளவில் பாலா நகர் மெட்ரோ ஸ்டேஷன் அருகில் உள்ள பெட்ரோல் பங்குக்கு சென்று இரண்டு லிட்டர் பெட்ரோல் வாங்கி வந்து பேருந்துகளை எரித்திருக்கிறான். பேருந்துகளை எரித்த பின் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளான். மேலும் இந்தப் பாதக செயலில் ஈடுபடும் போது அவன் மது அருந்தி இருந்ததாகவும் காவல்துறையின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. அப்பகுதிகளில் கிடைத்த சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளியை அடையாளம் கண்டு கொண்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பின்னர் லட்சுமிபுரம் கிராம பகுதியில் பதுங்கி இருந்த அவனை கைது செய்து விசாரணை செய்ததில் உண்மையை ஒத்துக் கொண்டுள்ளான்.

Rupa

Next Post

ரோட்டில் கிடந்த சாக்கு மூட்டை! காயங்களுடன், நிர்வாண நிலையில் பெண் சடலம்!

Thu Feb 16 , 2023
உத்திர பிரதேசம் மாநிலத்தில் சாலையோரம் கிடந்த சாக்கு சாக்கு மூட்டையில் பிணம் இருந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உத்திரபிரதேச மாநிலம் மீஈரட்டின் அருகே உள்ள கார்கோடா பகுதியில் சாலையோரம் சாக்கு முட்டை ஒன்று கிடந்தது. அது சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்ததால் அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர் இதனைத் தொடர்ந்து அங்கு வந்த காவல்துறை மூட்டையை திறந்து பார்த்த அப்போது காயங்களுடன் நிர்வாண நிலையில் ஒரு பெண் பிணம் […]

You May Like