SCHOOL EDUCATION: 6 வயது பூர்த்தி அடைந்த மாணவர்களை மட்டுமே 1 ஆம் வகுப்பில் சேர்வதற்கு அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசு மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் எழுதி இருக்கிறது.
இந்தியா என்பது பல மாநிலங்களையும் யூனியன் பிரதேசங்களையும் கொண்ட ஒரு நாடாகும். இங்கு மாநில அரசுகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே உரிமைகள் பங்கிடப்பட்டிருக்கிறது. மேலும் மாநில அரசுகளுக்கு என தனி உரிமையும் இருந்து வருகிறது. கல்வி தொடர்பாக மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் தனித்தனி கொள்கைகளை கொண்டிருக்கிறது.
இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான கல்வி திட்டத்தை கொண்டு வருவதற்கு மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையை கடந்த 2020 ஆம் ஆண்டு வகுத்தது . இதனை சில மாநில அரசுகள் பின்பற்றி வருகின்றன. இன்னும் பிற மாநிலங்களில் மாநிலக் கல்விக் கொள்கையே நடைமுறையில் இருக்கிறது. இந்நிலையில் வர இருக்கின்ற 2024-25 கல்வியாண்டில் குழந்தைகள் 1-ஆம் வகுப்பில் சேர்வதற்கு 6 வயது கட்டாயம் நிரம்பி இருக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது
மேலும் வரை இருக்கின்ற கல்வி ஆண்டில் 1-ஆம் வகுப்பில் 6 வயது பூர்த்தி அடைந்த குழந்தைகளை சேர்க்குமாறு மத்திய கல்வித்துறை கோரிக்கை வைத்திருக்கிறது. மேலும் இது தொடர்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் எழுதி இருக்கும் மத்திய கல்வித்துறை தேசிய கல்விக் கொள்கை மற்றும் கல்வி உரிமைச் சட்டத்தின் படி இந்த நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறது.
மேலும் குழந்தைகளின் அடிப்படை கல்வியை வலுப்படுத்துவதற்கு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கல்வித் துறை தெரிவித்திருக்கிறது. மத்திய அரசு வகுத்துள்ள புதிய கல்விக் கொள்கையின் படி 3-8 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் அடிப்படைக் கல்விக்கு தகுதியானவர்கள் என தெரிவித்துள்ளது . ஒன்றாம் வகுப்பில் சேரும் குழந்தைகள் கட்டாயம் 6 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கிறது.