கணவன் தன்னுடைய நகைகள் அனைத்தையும், அடகு வைத்து குடித்ததால், மனமுடைந்த புதுமணப்பெண், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதால், கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் புதுக்கோட்டை அருகே, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில், அமைந்திருக்கிறது திருவரங்குளம் நிம்புனேஸ்வரம் என்ற கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த பொற்பனையான் என்பவருக்கும், கொத்தக்கோட்டை கிராமத்தில் வசித்து வரும் பிரியங்கா என்ற பெண்ணுக்கும் கடந்த 14 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இதில், பொற்பனையான் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று சொல்லப்படுகிறது.
ஆகவே, நாள்தோறும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும், தன்னுடைய மனைவிக்கு தெரியாமல், அவருடைய நகைகளை பொற்பனையான் அடகு வைத்திருக்கிறார். அதோடு, நகைகளை பற்றி கேள்வி எழுப்பியபோது, எல்லாவற்றையும் விற்று, மது குடித்து விட்டதாக, பொற்பனையான் தெரிவித்ததால், மனம் உடைந்த பிரியங்கா, வீட்டில் யாரும் இல்லாதபோது, தற்கொலை செய்து கொண்டார்.
இதை அறிந்து, அதிர்ச்சி அடைந்த பொற்பனையான், தானும் தற்கொலை செய்து கொண்டார். இந்த சோக சம்பவம் தொடர்பாக, வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், இருவர் உடலையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு இந்த வழக்கு தொடர்பாக, விசாரணை நடத்தி வருகிறார்கள்.