இந்தியாவில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் கீழ், கிராமப்புற மக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 100 நாட்கள் உடல் உழைப்பு வேலை வழங்கப்படுகிறது.
இதற்காக அவர்களுக்கு விதிமுறைப்படி ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மாநில அரசு 100 நாட்களுக்கு மேல் கூடுதலாக 50 நாட்கள் வேலை வழங்கினால், மத்திய அரசும் தனது சொந்த நிதியில் இருந்து ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க அனுமதி அளித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு (100 நாள் வேலை) திட்டப் பணியாளர்களுக்கு ஜனவரி 1ஆம் தேதி முதல் மின்னணு முறையில் வருகைப் பதிவு செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
தொழிலாளர்களின் பணி மற்றும் வருகை குறித்து எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதனால் குழப்பம் இல்லாத நிலையில் பணிகள் சீராக நடைபெறும்.