fbpx

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமை தொகை…..! உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு……!

ஈரோடு கிழக்கு தொகுதியின் இடை தேர்தல் தேதி நெருங்க நெருங்க தேர்தல் பிரச்சாரக் களம் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் காணப்படுகிறது. ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்று இரு தரப்பினரும் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.

அந்த வகையில், ஆளும் தரப்பான திமுக பல அதிரடி பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது ஆளும் கட்சியாக இருந்து கொண்டு இடைத்தேர்தலில் வெற்றி பெற விட்டால் மிகப்பெரிய அவமானம் என்று நினைக்கும் திமுக இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

அந்த வகையில், ஈரோடு கிழக்கு கணபதி நகர் பகுதியில் திமுகவின் இளைஞர் அணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் அவருடன் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் இ வி கே எஸ் இளங்கோவன் பிரச்சார வாகனத்தில் பங்கேற்றார்.

அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், வாக்குச்சாவடியில் முதல் பெட்டியில் இரண்டாவதாக கை சின்னம் இருக்கும் எனவும், 2ம் தேதி வாக்கு எண்ணிக்கையில் கை சின்னம் முதல் இடத்தில் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

திருமகன் ஈவேராவை 9000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தீர்கள். ஈ.வி.கே.எஸ் இளங்கோதனை ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தால் மாதம் ஒருமுறை இங்கே வந்து தங்குகின்றேன் என்றும் அவர் கூறினார். அத்துடன் ஈ வி கே எஸ் இளங்கோவனை 50,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட உதயநிதி ஸ்டாலின் அதிமுகவின் வேட்பாளரை மக்கள் விரட்டி அடிப்பதை தொலைக்காட்சியில் நீங்கள் பார்த்திருக்கலாம் என்று கூறினார்.

அதோடு, முந்தைய அதிமுக ஆட்சியாளர்கள் அரசின் கஜானா 5 லட்சம் கோடி கடனில் இருந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு நோய் தொற்று பரவல் நிவாரண தொகை, பால் விலை குறைப்பு, பெண்களுக்கு இலவச பேருந்து, மக்களை தேடி மருத்துவம் காலை சிற்றுண்டி போன்ற பல திட்டங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

பெண்களுக்கான 1000 ரூபாய் உரிமை தொகைக்கு நான் உறுதிமொழி வழங்குகிறேன். தங்களுக்கான ஆயிரம் ரூபாய் உரிமை தொகை திட்டம் 5 அல்லது 6 மாதங்களில் வழங்கப்படும் என்று கூறியிருக்கிறார். நம்பர்-1 முதலமைச்சராக ஸ்டாலின் எடுக்கிறார் மிக விரைவில் நம்பர் ஒன் மாநிலமாக தமிழகம் இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

Next Post

நிலத்தடி நீரில் கதிர்வீச்சு அபாயம்.. வடகொரியாவின் அணு ஆயுத சோதனையால் ஏற்பட்ட விபரீதம்...

Tue Feb 21 , 2023
அணு ஆயுத சோதனை தளத்திற்கு அருகில் உள்ள வட கொரிய நகரங்களில் நிலத்தடி நீர் கதிர்வீச்சு அபாயத்தைக் கொண்டுள்ளது மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.. உலகின் மிகவும் ரகசியமான நாடாக கருதப்படும் வடகொரியா, பல்வேறு கடுமையான மற்றும் விசித்திரமான சட்டங்களை பின்பற்றி வருகிறது.. மேலும் அவ்வப்போது அணு ஆயுத சோதனைகளை நடத்தி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது..அதன்படி 2006 மற்றும் 2017க்கு இடையே 6 அணு ஆயுத சோதனைகளை ரகசியமாக […]

You May Like