fbpx

இரட்டை இலை சின்னம் சுகேஷிடம் 12 கோடி லஞ்சம் பெற்ற; 81 சிறை அதிகாரிகள்… திகார் சிறையில் பரபரப்பு…!

இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் கைதான, சுகேஷ் சந்திரசேகர் டெல்லி திஹார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கிருந்து தன்னை வேறு சிறைச்சாலைக்கு மாற்ற வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் சிறையில் இருக்கும் 80 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மீது டெல்லி காவல்துறையினர், வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் காவல்துறையினரே, சந்திரசேகரிடம் லஞ்சம் வாங்கியதாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் ஜெயில் அதிகாரிகள் சுகேஷிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு அவருக்கு, செல்போன்கள், ஒரு தனி அறை, மேலும் பல சொகுசு வசதிகளை செய்து கொடுத்துள்ளனர். மொத்தம் 81 அதிகாரிகள் 12 கோடி லஞ்சம் வாங்கி உள்ளனர். இது சுரேஷ் சந்திரசேகருக்கு அவரது கூட்டாளிகளை தொடர்பு கொண்டு சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவியது.
இதுதொடர்பாக திகார் சிறை நிர்வாகத்திடம் அனுமதி வாங்கி, காவல்துறையினர் குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்த விவகாரத்தில் ஏற்கனவே எட்டு ஜெயில் ஊழியர்களை, காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதற்கு முன் சந்திரசேகர் தனது கூட்டாளிகளை தொடர்பு கொள்ள, ஜெயில் ஹாஸ்பிடலில் பணிபுரியும் மருத்துவ ஊழியர்களின் உதவியை பெற்றதாக குற்றச்சாட்டுகளை எதிர் கொண்டார். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் ஜெயில் அதிகாரிகளுக்கு மாதந்தோறும் 1.5 கோடி ரூபாய் லஞ்சமாக கொடுத்தது தெரியவந்துள்ளது.

Rupa

Next Post

முதலமைச்சர் முக.ஸ்டாலினுக்கு கொரோனா..! அனைவரும் பாதுகாப்பாய் இருப்போம் என ட்விட்டரில் பதிவு..!

Tue Jul 12 , 2022
தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”இன்று உடற்சோர்வு சற்று இருந்ததாகவும், பரிசோதனை செய்து பார்த்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் முதலமைச்சர் முக.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். மேலும், அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் கூட 2, 3 […]
முதலமைச்சர் முக.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி..! அனைவரும் பாதுகாப்பாய் இருப்போம் என ட்விட்டரில் பதிவு..!

You May Like