fbpx

பொதுத்தேர்வு எழுதிய 12ம் வகுப்பு மாணவிக்கு அரிவாள் வெட்டு….! காதலிக்க மறுத்ததால் இளைஞர் வெறிச்செயல் தூத்துக்குடி அருகே பரபரப்பு…..!

தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் ஒரு மாணவியை செக்காரக்குடி கிராமத்திற்கு அருகே உள்ள ஒரு பகுதியைச் சேர்ந்த சோலையப்பன் என்ற வாலிபர் ஒருதலையாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது.

ஆனால் அந்த மாணவி அந்த இளைஞரின் காதலை ஏற்க மறுத்துவிட்டார். இந்த நிலையில், அந்த மாணவி மீது இளைஞர் சோலையப்பன் கடும் கோபத்தில் இருந்து வந்ததாக சொல்லப்படுகின்றது. இத்தகைய நிலையில், தான் நேற்று 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி விட்டு பள்ளியை விட்டு வெளியே வந்த பள்ளி மாணவியை பள்ளிக்கு அருகே வைத்து சோலையப்பன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தலையில் வெட்டி உள்ளார்.

இதன் காரணமாக, தலையில் பலத்த காயமடைந்த அந்த பள்ளி மாணவியை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர் சோலையப்பனை தட்டப்பாரை காவல்துறையினர் கைது செய்தனர் மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் காவல்துறை சார்ந்தவர்கள். காதலிக்க மறுத்த 12ம் வகுப்பு மாணவி இளைஞரால் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

’என் எதிரே ரெண்டு பாப்பா’..!! கட்டிப்பிடித்தபடி பைக் சாகசம்..!! தட்டித் தூக்கியது காவல்துறை..!!

Tue Apr 4 , 2023
யூடியூப் தளம் பிரபலமானதை அடுத்து சூப்பர் பைக் மோகம் இளைஞர்கள் மத்தியில் தலைவிரித்தாடுகிறது. ஒரு கார் வாங்கும் விலையில் பைக் விற்கப்பட்டாலும், கடன் வாங்கியாவது சூப்பர் பைக்குகளை வாங்கி வீடியோ வெளியிட்டு திருப்தி அடைகிறார்கள் சில இளைஞர்கள். ரூ.10 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரையிலான இந்த பைக்குகளில் வீலிங் செய்யவில்லை என்றால் தெய்வக்குத்தமாகி விடும் என்கிற ரீதியில் சாகச வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் நிறைந்து கிடக்கின்றன. அந்த வகையில், […]
’என் எதிரே ரெண்டு பாப்பா’..!! கட்டிப்பிடித்தபடி பைக் சாகசம்..!! தட்டித் தூக்கியது காவல்துறை..!!

You May Like