சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் ஜோதி ராமன் உயர்நீதிமன்ற நீதித்துறை பதிவாளராக இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். அந்த பதவியில் இருந்த எம் என் செந்தில்குமார் கோவை நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் அமர்வு நீதிபதியாக மாறுதல் செய்யப்பட்டிருக்கிறார்.
சென்னை வணிக வழக்குகளுக்கான நீதிமன்ற அமர்வு நீதிபதி எல் எஸ் சத்தியமூர்த்தி தமிழ்நாடு மாநில நீதித்துறை பயிலகத்தின் இயக்குனராகவும், அங்கே பணிபுரிந்த நீதிபதி டி லிங்கேஸ்வரன் சென்னை பெருநகர உரிமையியல் தடா நீதிமன்ற நீதிபதியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.
அதேபோன்று கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கை விசாரித்த நீலகிரி மாவட்ட அமர்வு நீதிபதி பி முருகன் சேலம் தொழிலாளர் நீதிமன்றத்திற்கும், நீலகிரி மாவட்ட அமர்வு மகளிர் நீதிமன்ற நீதிபதி ஜி நாராயணன் புதுக்கோட்டை மாவட்ட தலைமை அமர்வு நீதிபதியாகவும், அங்கே பணிபுரிந்த தலைமை அமர்வு நீதிபதி ஏ அப்துல் காதர் நீலகிரி மாவட்ட அமர்வு நீதிபதியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். அதேபோன்று தமிழ்நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக 159 நீதிபதிகளை இடமாறுதல் செய்து உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் பி தனபால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.