fbpx

இன்ஸ்டாகிராம் காதலால் ஏற்பட்ட பழக்கம்….! பெண்களை மிரட்டி சீரழித்த சிறுவன்….!

நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான குற்றங்கள் அதிகரிக்க தொடங்கிவிட்டனர். அதனை கட்டுப்படுத்துவதற்கு தமிழகத்தை பொறுத்தவரையில் தமிழக அரசும், காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

மத்திய அரசும் இது போன்ற நடவடிக்கைகளை தடுக்கும் விதமாக பல்வேறு சிறப்பு சட்டங்களை இயற்றி வருகிறது.ஆனாலும் அரசாங்கம் மற்றும் காவல்துறையினரின் கண்களில் மண்ணைத்தூவி விட்டு சில சமூக விரோதிகள் இது போன்ற நடவடிக்கைகளில் இன்னும் ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அதே நேரம் மாநில அரசும், காவல் துறையும் இது சம்பந்தமாக எப்படிப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் அந்த நடவடிக்கை இது போன்ற குற்றங்களை தடுப்பதாக தெரியவில்லை நாட்கள் செல்ல, செல்ல இது போன்ற குற்றங்கள் அதிகரிக்க தான் தொடங்குகின்றன.ஆனால் வட மாநிலங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் குறைந்தே காணப்படுகிறது.

அந்த வகையில், தலைநகர் டெல்லியில் 17 வயது சிறுவன் பல பெண்களின் அந்தரங்க புகைப்படங்களை பெற்று அவர்களை மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இன்ஸ்டாகிராமில் பல மைனர் பெண்களை பின் தொடர்ந்து அந்த பெண்களின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாக 17 வயது சிறுவனை டெல்லி காவல் துறையினர் கைது செய்து இருக்கிறார்கள்.

தன்னுடைய 14 வயது மகள் தன்னுடைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் மூலமாக யாரோ ஒரு நபருடன் பகிர்ந்து கொண்டதாகவும், அந்தப் புகைப்படங்கள் யாரோ ஒருவரால் பரப்பப்பட்டிருக்கலாம் என்று பயப்படுவதாகவும் அந்த சிறுமியின் தந்தையிடம் இருந்து புகார் வந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். சிறுமிகளை மிரட்டியதாக 17 வயது சிறுவனை டெல்லி காவல்துறையினர் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர்களுடன் நட்பாக பேசி, பழகிய பிறகு அவர்களுடைய அந்தரங்க புகைப்படங்களை வெளியிடுவேன் என்று சிறுவன் மிரட்டியிருக்கிறான். ஒரு 14 வயது சிறுமி அந்த சிறுவனுடன் பகிர்ந்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூக வலைதளங்களில் வெளியாகலாம் என்று பயந்து போன சிறுமி அவருடைய தந்தையிடம் தெரிவித்து அந்த சிறுமியின் தந்தை காவல்துறையிடம் புகார் வழங்கியிருக்கிறார்.

குற்றம் சுமத்தப்பட்டவரின் அடையாளத்தை அறிந்து கொள்வதற்காக ஐபி முகவரிகள் மற்றும் கைபேசி எண்ணை காவல்துறையினர் கண்காணித்து வந்தனர். குற்றவாளி அடையாளம் கண்டு கொண்ட காவல்துறையினர் அதன்பிறகு அந்த குற்றவாளியின் மீட்டருக்கு சென்றனர் ஆனால் அங்கே குற்றவாளி இல்லை. ஆகவே மகனை காவல் நிலையத்தில் ஒப்படைக்குமாறு அவருடைய தந்தைக்கு காவல்துறை உத்தரவிட்டு சென்றது.

குற்றம் சுமத்தப்பட்டவரின் தந்தை அவரை காவல்துறையில் ஆஜர்படுத்தினார். இதனை தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டார் இது தொடர்பாக தெரிவித்த காவல்துறையினர், சிறுவன் தான் செய்த தவறை ஒப்புக்கொண்டார். குற்றம் சுமத்தப்பட்டவர் கடந்த வருடம் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று தற்சமயம் இளங்கலை மாணவராக இருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த செயலை செய்ய அவர் பயன்படுத்திய சிம் கார்டு மற்றும் செல்போனை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதில் இந்த சிறுமி மட்டுமல்லாமல் பல்வேறு பெண்களும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்கள்.இந்த சம்பவம் தலைநகர் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது

Next Post

இன்ஸ்டா காதலியுடன் ரூம் போட்ட இளைஞர்..!! திடீரென நுழைந்த போலீஸ்..!! சிறுமி அதிர்ச்சி வாக்குமூலம்..!!

Sun Jan 29 , 2023
இன்ஸ்டாகிராம் காதலியை விடுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர். சென்னை சூளைமேடு பகுதியில் வசித்து வருபவர் சாந்தி (35). இவர் கடந்த 22ஆம் தேதி சூளைமேடு காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், தன்னுடைய 13 வயது மகள் தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். அவரை திடீரென காணவில்லை. எனவே, அவளை கண்டுபிடித்து […]
இன்ஸ்டா காதலியுடன் ரூம் போட்ட இளைஞர்..!! திடீரென நுழைந்த போலீஸ்..!! சிறுமி அதிர்ச்சி வாக்குமூலம்..!!

You May Like