தேனி மாவட்டம் பூதிபுரம் அருகே வீருச்சின்னம்மாள் புரத்தைச் சேர்ந்த சரவணன் என்பதரின் மகன் கமலேஸ்வரன் (18). இவர் பூதிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து முடித்திருக்கிறார் இவர் பழனிசெட்டிய பட்டியில் இருக்கின்ற பழனியப்பா பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வரும் கோடேந்திரபுரத்தைச் சேர்ந்த ஒரு மாணவியை காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது.
இருவரும் ஒருவரை, ஒருவர் காதலித்து வந்த நிலையில், இவர்களுடைய காதல் விவகாரம் காரணமாக, இரு குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சனையாக வெடித்தது. இந்த பிரச்சனையில் அந்த மாணவியின் பெற்றோர் தன்னாட்சி மற்றும் தமிழ்ச்செல்வி உள்ளிட்ட இருவரும் கமலேஸ்வரனுக்கு கொலை மிரட்டல் எடுத்ததாக சொல்லப்படுகிறது.
இந்த சூழ்நிலையில்தான் நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் தன்னுடைய சொந்த ஊருக்கு சென்ற கமலேஸ்வரன் வீடு திரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் பெற்றோர்கள் பழனிசெட்டியபட்டி காவல் நிலையத்தில் புகார் வழங்கினர். இத்தகைய நிலையில், பூதிபுரம் கல்லூரணி பகுதியில் இளைஞர் ஒருவர் கழுத்து வெட்டப்பட்ட நிலையில், உயிரிழந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. ஆகவே அந்த பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர், இறந்து கிடப்பது கமலேஸ்வரன் தான் என்பதை உறுதிப்படுத்தினர்.
ஆகவே கமலேஸ்வரனின் உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து சந்தேகிக்கப்படும் நபர்களான தன்னாட்சி மற்றும் தமிழ்ச்செல்வி உள்ளிட்ட இருவரும் தலைமறைவாக இருக்கின்ற நிலையில், காவல்துறையினர் இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றன.