fbpx

அம்மாடியோவ் 2.50 கோடி மதிப்பிலான தங்கத்தை அசால்ட்டாக விமானத்தில் கடத்திய 2 பேர் அதிரடி கைது….!

சாதாரணமாக, கொள்ளை சம்பவம் என்பது உள்நாட்டில் நடைபெற்றாலே அதனை தடுத்து நிறுத்துவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.

இந்த கொள்ளை சம்பவத்தை தடுத்து நிறுத்துவதற்காகவே காவல்துறையில் ஒரு தனி பிரிவு இருக்கத்தான் செய்கிறது. அந்த அளவிற்கு இந்த கொள்ளை சம்பவம் மிகவும் ஆபத்தானதாகவும் இருக்கிறது.

அதேநேரம் பல பரிசோதனைகளை கடந்து தான் விமான நிலையத்திலிருந்து வெளியேறும் விமான பயணிகள் விமான நிலையத்திலிருந்து வெளிவர முடியும்.

ஆனால் அப்படிப்பட்ட விமான நிலையத்திலேயே கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டால் என்ன நடக்கும்?

சார்ஜாவில் இருந்து கோவை மாவட்டத்திற்கு நேற்று முன் தினம் இயக்கப்பட்ட ஒரு விமானத்தில் பயணிகள் சிலர் தங்கம், வெள்ளி உள்ளிட்டவற்றை கடத்தி வருவதாக வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனை அடிப்படையாகக் கொண்டு, கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வந்த காவல்துறை அதிகாரிகள், பயணிகள் 2 பேரிடம் இருந்து மூன்று அரை கிலோ எடையுள்ள 2.50 கோடி மதிப்பிலான கடத்தல் தங்க நகைகளை பறிமுதல் செய்து இருக்கிறார்கள்.

விசாரணையில் இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் கடலூரை சேர்ந்த மணிகண்டன் (32) மற்றும் திருச்சியை சேர்ந்த இப்ராஹிம் (20) என்ற நபர்கள் என தெரிய வந்திருக்கிறது. இருவரும் கைது செய்யப்பட்டனர், தொடர்ச்சியாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Next Post

பட்டு வேஷ்டி சட்டையுடன் தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்….!

Sun Jan 15 , 2023
உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் மிக விமர்சையாக கொண்டாடப்படும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் நேற்று தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.இதனை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஆங்காங்கே விமர்சையாக கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில், பல அரசியல் கட்சித் தலைவர்கள், முதலமைச்சர்கள், அமைச்சர்கள் பிரதமர் என்று தமிழக மக்களுக்கு தனி, தனியே வாழ்த்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கட்டு வேஷ்டி சட்டை அணிந்து […]

You May Like