fbpx

அடுத்தடுத்து உயிரிழந்த இரு குழந்தைகள்….! மன வேதனையில் தாய் எடுத்த அதிரடி முடிவு….!

எந்த ஒரு செயலுக்கும் தற்கொலை ஒரு நல்ல முடிவாக இருக்காது. விரும்பத்தகாத செயல்கள், மன உளைச்சலை அளிக்கும் செயல்கள் என்று பலவிதமான செயல்கள் நம் கண் முன்னே நடக்கலாம்.ஆனால் அவை அனைத்தையும் நாம் நிச்சயமாக அமைதியான முறையில் கடந்து வந்து தான் ஆக வேண்டும்.

அதற்காக நிச்சயமாக நம்முடைய மன தைரியத்தை வளர்த்துக் கொள்வது அவசியம். அப்படி மன தைரியம் இல்லாவிட்டால் மன உளைச்சல் ஏற்படும்போது நிச்சயமாக தற்கொலை உள்ளிட்ட தவறான முடிவுகளை மேற்கொள்ள நேரலாம்.மனோதிடமும், மன தைரியமும் இருந்தால் எப்படிப்பட்ட சூழ்நிலையையும் அனைவரும் சமாளித்து விடலாம்.

ஆனால் இந்த இரண்டும் இல்லாத பல நபர்கள் பல நேரங்களில் தவறான முடிவெடுத்து விடுகிறார்கள். அதன் காரணமாக, அவருடைய உறவினர் பெற்றோர் குழந்தைகள் கணவன், மனைவி உள்ளிட்டோர் கடைசிவரையில் துன்பப்படுகிறார்கள்.

சென்னை பழைய பல்லாவரம் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் மனிஷா(20), தீனு (27) இந்த தம்பதியினருக்கு திருமணம் நடந்து 3 வருடம் ஆகிவிட்டது. தீனு மட்டும் வேலூர் மாவட்டத்தில் தங்கி இருந்து வேலை பார்த்து வருகின்றார். மனுஷா பழைய பல்லாவரத்தில் இருக்கின்ற தன்னுடைய தாய் வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் தான் திருமணம் ஆன முதல் ஆண்டு மனிஷாவிற்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஒன்றரை வயது இருந்தபோது திடீரென்று உண்டான உடல் நலக்குறைவு காரணமாக அந்த குழந்தை உயிரிழந்தது. ஆகவே கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான மனுஷாவிற்கு கடந்த 8️ மாதங்களுக்கு முன்னர் 2வது குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்த சில தினங்களில் அந்த குழந்தையும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தது. ஆகவே மேலும் மன உளைச்சலுக்கு உள்ளான மனிஷா நாள்தோறும் தன்னுடைய இறந்து போன குழந்தைகளை நினைத்து வீட்டில் அழுது கொண்டு இருந்ததாக தெரிகிறது. இதனால் அவருக்கு உறவினர்கள் ஆறுதல் தெரிவித்து வந்தனர்.

ஆனாலும் எப்போதும் தனிமையில் நாட்களை கழித்து வந்தார் மனிஷா. இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தன்னுடைய படுக்கை அறைக்கு சென்ற மனீஷா கதவை உட்புறமாக தாழிட்டுக்கொண்டார். நீண்ட நேரம் ஆன பின்னரும் அவர் வெளியே வராத காரணத்தால் மனிஷாவின் தாய் சுமித்ரா கதவை தட்டினார்.

வெகு நேரம் கதவைத் தட்டியும் கதவு திறக்கப்படாததால் அக்கம், பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது அங்கே மனிஷா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் அங்கே மனிஷாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறிவிட்டார்கள்.

இது தொடர்பாக உடனடியாக பல்லாவரம் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதனை அடிப்படையாகக் கொண்டு சம்பவ இடத்திற்கு வரைந்து வந்த காவல்துறையினர் உயிரிழந்த மனுஷாவின் உடலை நீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அத்துடன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.அடுத்தடுத்து இரு குழந்தைகள் உயிரிழந்ததால், மன வேதனையில் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பழைய பல்லாவரம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிய மதபோதகர்…..! மாவட்ட ஆட்சியாளரிடம் புகார் அளித்த பெண்மணி….!

Sat Jan 21 , 2023
பல பெண்கள் ஆண்கள் கூறும் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாந்து பல சிக்கல்களை சந்திக்கின்றனர். அதோடு அவர்கள் வெளியே சொல்ல முடியாத இழப்புகளையும் சந்திக்க நேரிடுகிறது. ஆகவே பெண்கள் அனைவரும், எப்போதும் அனைத்து விஷயங்களையும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது. மதுரையை சார்ந்த ஒரு பெண் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு பரபரப்பான புகாரை வழங்கினார். அந்த புகாரியில் மதுரையைச் சேர்ந்த நான் […]

You May Like