திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கொத்தம்பட்டியில் குண்டாற்றுப் பாலத்தின் கீழ் நேற்று ஒருவர் முகம் மற்றும் தலையில் வளர்த்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில், கிடந்துள்ளார். இது தொடர்பாக தகவல் அறிந்த துறையூர் காவல்துறையினர் அங்கு சென்று பார்வையிட்டனர் அதன் பிறகு இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர்.
அதேபோல கொத்தம்பட்டியில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பொன்னர் சங்கம் பட்டி கிராமத்தில் கண்ணனூர் பாளையம் ஏரிக்கு செல்லும் உபரி நீர் வாய்க்காலின் பாலத்துக்கு அடியில் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பது நேற்று மாலை தெரிய வந்தது. இது தொடர்பாக தகவல் இருந்து ஜம்புநாதபுரம் காவல்துறையினர் அந்த பகுதிக்கு சென்று பார்த்த போது இந்த நபருக்கும் முகம் மற்றும் தலையில் படுகாயங்கள் காணப்பட்டனர்.
ஆகவே இரண்டு கொலைகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற விதத்தில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து திருச்சி சரக சரவண சுந்தர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார், முசிறி டிஎஸ்பி யாஸ்மின் உள்ளிட்டோர் அந்த பகுதிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
காவல்துறை நடத்திய விசாரணையில் கொத்தம்பட்டி பாலத்தின் இறந்து கிடந்தவர் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள நெடுவான் கோட்டையைச் சேர்ந்த இளங்கோவன் என்பவரின் மகன் ஸ்டாலின் (40) என்பதும், பொன்னுசங்கம் பட்டி பகுதியில் இறந்து கிடந்தவர் அதே ஊரைச் சேர்ந்த காத்தலிங்கம் என்பவரின் மகன் பிரபு(40) என்பதும் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக டிஐஜி சரவணன் சுந்தரிடம் கேள்வி எழுப்பிய போது, இருவரையும் வேறு எங்காவது கொலை செய்து கொண்டு வந்து பாலத்தின் மேல் பகுதியில் இருந்து உருட்டி விட்டிருப்பதை போல தெரிகின்றது. இரு காவல்துறை ஆய்வாளர்கள் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்து கூறியுள்ளார்.