fbpx

தாயை விரட்டிவிட்டு தகாத செயலில் ஈடுபட்ட தந்தை! சொந்த மகன்களாலேயே கொலைசெய்யப்பட்ட கொடூரம்!

தர்மபுரி மாவட்டம் புலிகரையை சேர்ந்த விவசாயி கிருஷ்ணன்(55). இவருடைய மனைவி கந்தம்மாள் இவர்கள் இருவருக்கும் பிரேம்குமார், ரஞ்சித்குமார் என 2 மகன்கள் இருக்கின்றன. தங்களுடைய இரு மகன்களுக்கும் திருமணம் ஆகிய நிலையில், நேற்று விவசாயி கிருஷ்ணன் புலிகரையில் உள்ள தோட்டத்தில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்துள்ளார்.

இந்த சம்பவம் பற்றி அறிந்த மதிக்கோன்பாளையம் காவல்துறையினர் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று, கிருஷ்ணனின் உடலை கைப்பற்றி தர்மபுரியில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தநிலையில், விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளன.

இறந்த கிருஷ்ணனுக்கு குடிப்பழக்கமும் மற்றும் சீட்டாடும் பழக்கமும் இருந்து வந்துள்ளது. இதனை அறிந்துகொண்ட மகன்கள் மற்றும் மனைவி கிருஷ்ணனை இது பற்றி கேட்டு சண்டை போட்டுள்ளனர். இது தொடர்பாக இவர்களின் குடும்பத்திற்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மனைவி ஒரு வருடம் முன்பு மனைவி கந்தம்மாவை ஒரு வருடம் முன்பு கிருஷ்ணன் அடித்து சண்டை போட்டுள்ளார் ஆகவே கந்தம்மாள் அவருடைய அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார்.

இரு மகன்களும் வெவ்வேறு இடத்தில் தங்கி வேலை பார்த்து வந்திருக்கின்றனர். இந்த நிலையில் மனைவி மற்றும் மகன்கள் இல்லாத நிலையில் கிருஷ்ணன் தனியாக வசித்து வந்துள்ளார். மது போதைக்கு அடிமையான கிருஷ்ணன் சில பெண்களுடன் ஓ தகாத உறவில் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் ,மனைவி கந்தம்மாளுக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்ததால் அவருடைய இரு மகன்களும் அவரை மருத்துவமனையில் அழைத்துச் சென்று காட்டியுள்ளனர். இந்த நிலையில், நேற்று முன் தினம் இரு மகன்களும் புலிகரையில் உள்ள தோட்டத்து வீட்டிற்கு தன்னுடைய தந்தையை பார்ப்பதற்காக சென்றுள்ளனர். அங்கு சென்றவர்கள் தாயின் உடல்நிலை பற்றியும், அவரை கவனிக்காமல் விட்டது பற்றியும் கேட்டு சண்டை போட்டுள்ளனர்.

இதனால் மகன்களுக்கும், அப்பாவிற்கும் சண்டை முற்றிய நிலையில், கிருஷ்ணனை இரு மகன்கள் மற்றும் அவர்களுடன் 2 நபர்கள் சேர்ந்து அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தி மற்றும் அறிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

இதனையடுத்து இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட மதிக்கோன்பாளையம் காவல்துறையினர் அங்கு சென்று இரு மகன்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரு மகன்களோடு வந்த மற்ற 2 நபர்களையும் தேடி வருகின்றனர்.

இது பற்றி பிரேம்குமார், ரஞ்சித்குமாரிடம் விசாரணை நடத்திய காவல்துறையினரிடம் அவர்கள் கூறியதாவது, தனது தந்தை குடும்பத்தை கவனிக்காமல் மது போதைக்கு அடிமையாகி தகாத செயல்களில் ஈடுபட்டதால் தங்கள் ஆத்திரமடைந்து இவ்வாறு செய்ததாகவும், வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Next Post

திருமணம் செய்து கொள்வதாக கூறி இளம்பெண்ணை சீரழித்த ஆசாமி!

Thu Dec 15 , 2022
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பட்டியில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார் ராமதாஸ்(34). ராமதாசுக்கு தர்மபுரி மாவட்டம் செங்கொடி புரத்தில் வசிக்கும் 24 வயதான இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் வெகு நாட்களாக நட்புடன் பழகி வந்ததாகவும், கூறப்படுகிறது. இதனிடையே அந்த இளம் பெண்ணிடம் ராமதாஸ் அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி அவருடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். சில நாட்களுக்கு […]

You May Like