fbpx

2023 பொங்கல் பரிசு தொகுப்பு! இன்று முதல் டோக்கன் விநியோகம்!

2023 ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம், பொங்கல் பண்டிகை வருவதற்கு இன்னும் 11 தினங்களே இருக்கின்றனர்.

இந்த பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் மிகச் சிறப்பாக கொண்டாடுவதற்காக கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தமிழக அரசின் சார்பாக கடந்த 2021 ஆம் ஆண்டு 2500 ரூபாய் ரொக்க பணம் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டது.

ஆனால் சென்ற வருடம் பொங்கல் பண்டிகையின் போது திமுக அரசு பொறுப்பேற்று இருந்த நிலையில், பொங்கல் பரிசுத்த வகுப்பு இடம் பெற்று இருந்த ரொக்க பணம் ரத்து செய்யப்பட்டு, அதற்கு பதிலாக பொங்கல் வைக்க தேவைப்படும் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட 21 வகையான பொருட்கள் மட்டுமே வழங்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த வருடத்திற்கான பொங்கல் பரிசு தொகுப்பு எப்போது வழங்கப்படும்? அந்த பொங்கல் பரிசு தொகுப்பில் என்னென்ன? பொருட்கள் இடம் பெறும்? இந்த பொங்கல் பரிசு தொகையோடு ரொக்க பணம் வழங்கப்படுமா? என்று பொதுமக்கள் ஆர்வத்துடன் காத்திருந்தார்கள்.

இந்த நிலையில், தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசுத்தொகுப்பு தொடர்பான அனைத்து விவரங்களையும் தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. அதனடிப்படையில் இந்த முறை ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, இலவச வேட்டி சேலை, முழு கரும்பு மற்றும் 1000 ரூபாய் வழங்கப்படவிருக்கிறது. இதற்கான டோக்கன் இன்று முதல் நியாய விலைக் கடைகளின் ஊழியர்கள் மூலமாக வீடு, வீடாக சென்று வழங்கப்படும். அதன் பின்னர் வரும் 9ம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு அனைத்து நியாய விலை கடைகளிலும் வழங்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.

அத்துடன் இதில் முறைகேடுகள் நடைபெறுவதை தவிர்க்கும் விதத்தில், குடும்ப உறுப்பினர்கள் கைரேகை வைத்தால் மட்டுமே 1000 ரூபாய் ரொக்க பணம் வழங்கப்படும் கைரேகை இணைக்கப்படவில்லை என்றால் யாருடைய கைரேகை இணைக்கப்பட்டிருக்கிறதோ, அவர்கள் மட்டுமே பொங்கல் பரிசு தொகையை பெற முடியும் என்று தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஆகவே பொங்கல் பரிசு தொகுப்பு வரும் 12ஆம் தேதிக்குள் தமிழ்நாடு முழுவதும் வழங்கி முடிக்கப்படும் என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருக்கிறார். பொங்கல் பரிசுத்த வகுப்பு பொருட்கள் தொடர்பான ஆய்வுக்குப் பிறகு உரையாற்றிய அவர் வரும் 9ம் தேதி முதல் 12 ஆம் தேதி வரையில் பொங்கல் பரிசு தொகுப்பை பொதுமக்கள் நியாய விலை கடைகளில் வாங்கிக் கொள்ளலாம். இந்த பரிசு தொகுப்பில் இடம்பெற்றுள்ள கரும்புகள் விவசாயிகளிடமிருந்து நேரடியாகவே அதிகாரிகளின் மூலமாக கொள்முதல் செய்யப்படுகிறது. இடைத்தரகர்கள் யாரும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

Next Post

கணவனை கொலை செய்வதாக நினைத்து மனைவி மீது கார் ஏற்றி படுகொலை! திருவண்ணாமலை அருகே கொடூரம்!

Tue Jan 3 , 2023
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் வெங்கட்ராயன் பேட்டை சேட் நகர் பகுதியில் முருகன் விஜயலட்சுமி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், முருகனின் மனைவி விஜயலட்சுமி நேற்று காலை 7 மணி அளவில் இருசக்கர வாகனத்தை இயக்கிக் கொண்டு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் வாகனத்தின் பின்னால் வந்த கார் ஒன்று அவர் இருசக்கர வாகனத்தின் மீது இடித்துவிட்டு மின்னல் வேகத்தில் பறந்து சென்றது. இந்த முகத்தில் […]

You May Like