fbpx

சென்னை அருகே தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல் பட்டம் விற்பனை….! ஒரே நாளில் 23 பேர் அதிரடி கைது…..!

மாஞ்சா நூல் பட்டதால் காயமடைந்து பலர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, மாஞ்சா நூல் பட்டம் பறக்க விடுவதற்கு சென்னை மாநகர காவல் ஆணையர் தடை விதித்திருக்கிறார் அதையும் மீறி மாஞ்சா நூல் பட்டம் பறக்க விடுபவர்கள், அந்த நகை பட்டங்களை விற்பனை செய்பவர்கள், பதுக்கி வைப்பவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து கண்காணிப்பு பணிகளும் முடுக்கி விடப்பட்டிருக்கின்றன.

இந்த நிலையில், மாஞ்சா நூல் பட்டங்களுக்கு எதிராக நேற்று முன்தினம் சென்னை முழுவதும் காவல்துறையினர் ஒரு நாள் சிறப்பு தணிக்கை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டனர் அதனை அடிப்படையாகக் கொண்டு 261 கடைகளில் திடீரென்று சோதனை நடத்தப்பட்டது இது குறித்து 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டனர். இதில் தொடர்புடைய 23 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றன. அவர்களிடமிருந்து 61 மாஞ்சா நூல் பட்டம் மற்றும் 2,118 மீட்டர் மாஞ்சா நூல்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.

இந்த விவகாரம் குறித்து கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரித்த போது சிலர் இணையதளம் மூலமாக பட்டம் மாஞ்சா நூல்களை வாங்கி சட்டவிரோத விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. சென்னை பெருநகரில் தடை செய்யப்பட்ட மாஞ்சா நூல் மற்றும் காற்றாடி விற்பனை செய்பவர்கள் பறக்க விடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் தேவைப்பட்டால் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்து இருக்கிறார்.

Next Post

பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது மும்பை அணி….! தோல்வியை தழுவியது பெங்களூரு….!

Mon May 22 , 2023
16வது ஐபிஎல் சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இதில் ஏற்கனவே குஜராத், லக்னோ, சென்னை உள்ளிட்ட அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற சூழ்நிலையில், மீதமுள்ள ஒரு இடத்திற்கு மும்பை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையில் கடுமையான போட்டி நிலவி வந்தது. இதில் பெங்களூரு அணி குஜராத்திடம் தோல்வியை சந்தித்தால் மட்டுமே மும்பைக்கான பிளே ஆப் சுற்று உறுதி செய்யப்படும் சூழ்நிலை காணப்பட்டது. இந்த நிலையில் […]

You May Like