சென்னை கொளத்தூர் ஆசிரியர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன்( 70) ஓய்வு பெற்ற அரசு ஊழியரான இவர், கடந்த பிப்ரவரி மாதம் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தோடு உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பிறகு 4 நாட்களுக்குப் பிறகு வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் வீட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்து 18 பவுன் நகைகள், வெள்ளி பூஜை பொருட்கள், 1 லட்சம் ரூபாய் பணம் உள்ளிட்டவை காணாமல் போய் இருந்தது தெரிய வந்தது.
இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். எண்ணூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த மோகன்(56) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதோடு தலைமறைவாக இருந்த திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த தினகரன் (35), ராமநாதபுரம் மாவட்டம் பனை குளத்தைச் சேர்ந்த செல்வகுமார் (38) உள்ளிட்டோரை தீவிரமாக தேடி வந்தனர்.
இத்தகைய நிலையில், தான் நேற்று முன்தினம் அந்த இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 27 பவுன் நகைகள், 250 கிராம் வெள்ளி பொருட்கள் 36,500 ரூபாய் பணம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். இவர்கள் ஏற்கனவே தஞ்சை, திருச்சி, சென்னை, திண்டிவனம், பெங்களூரு, ஓசூர் போன்ற பகுதிகளில் வீடுகளில் திருடியதும், அவர்கள் மீது 20திற்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் விசாரணையின் மூலமாக தெரிய வந்தது.