கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் ஒரு தனியார் உணவகம் ஒன்று இருக்கிறது. அதன் மேல் தளத்தில் பெண்களை வைத்து விபச்சாரம் நடைபெறுவதாக ஓசூர் காவல் உதவி கண்காணிப்பாளருக்கு ஒரு ரகசிய தகவல் வந்தது. அதனை அடிப்படையாகக் கொண்டு, அவருடைய தலைமையில் ஓசூர் அட்கோ காவல் துறையைச் சார்ந்தவர்கள் குறிப்பிட்ட அந்த தனியார் உணவகத்தில் திடீர் அதிரடி சோதனையை நடத்தினார்கள்.
காவல்துறையினரின் இந்த அதிரடி சோதனை நடந்தபோது அந்த உணவகத்தில் 3 பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்தது தெரிய வந்தது. ஆகவே உணவக உரிமையாளரான ஓசூர் கைராளி நகர் பகுதியில் சேர்ந்த பிஜு (48) என்ற நபரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
அத்துடன் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 3 பெண்களை வைத்து காவல்துறையினர் அவர்களை மறுவாழ்வு பெறுவதற்காக அரசு பெண்கள் பாதுகாப்பு இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர். கைது செய்யப்பட்ட பிஜுவை ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.
அதேபோல ஓசூரில் மற்றொரு பகுதியில் ஸ்பா என்ற பெயரில் பல பகுதிகளில் தொடர்ந்து விபச்சாரம் நடைபெறுவதாக தொடர்ந்து குற்றம் சுமத்தப்படுகிறது. தற்சமயம் மறையில் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 20 பெண்களை மீட்டுள்ள காவல் துறையினர் அவர்களை மறுவாழ்வு பெற பெண்கள் பாதுகாப்பு இல்லங்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்,
அதோடு ஓசூர் பகுதிகளில் விபச்சாரங்கள் நடைபெறுவது தெரிய வந்தால் பொதுமக்கள் காவல்துறையினருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும், அவர்களுடைய ரகசியம் பாதுகாக்கப்படும் எனவும் காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.