fbpx

புதுச்சேரியில் கோவில் நிலத்தை போலி உயில் தயாரித்து விற்பனை செய்த நான்கு பேர் அதிரடி கைது…..!

புதுச்சேரி பாரதி தெரு பழமையான காமாட்சியம்மன் கோவில் ஒன்று இருக்கிறது. இந்த கோவிலுக்கு சொந்தமான 64,035 சதுர அடி நிலம் ரெயின்போ நகரில் இருக்கிறது. இதன் மதிப்பு 12 கோடியே 49 லட்சத்து 52 ஆயிரம் ஆகும் என்று கூறப்படுகிறது இதற்கு நடுவே இந்த நிலத்தை கோவில் அறங்காவலர் குழுவினர் சென்ற வருடம் பார்வையிட்டனர்.

அப்போது அந்த நிலத்தை மர்ம நபர்கள் சிலர் போலியாக பத்திரம் தயாரித்து வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக கோவில் அறங்காவல் குழு நிர்வாகி சுப்பிரமணியன் புதுச்சேரி சிபிசிஐடி காவல் நிலையத்தில் புகார் வழங்கினார்.

அந்த புகாரின் அடிப்படையில் சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். அதோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் குமார் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் நடத்திய விசாரணையில் கோவிலுக்கு சொந்தமான நிலத்தின் ஒரு பகுதியை சென்னை ரத்தினவேல் (54), அவருடைய மனைவி மோகனசுந்தரி, மனோகரன்( 54) கலிதீர்த்தாள் குப்பம் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரியான சின்னராசு (74) மற்றும் ஒரு சிலர் போலி ஆவணங்களை தயாரித்து மனைகளாக மாற்றி விற்பனை செய்தது தெரிய வந்தது. இவர்கள் நால்வரையும் ஏற்கனவே காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கோவிலுக்கு சொந்தமான மற்றொரு பகுதியான 32,831 சதுர அடி நிலத்தை முத்தியால்ப்பேட்டை பகுதியை சேர்ந்த தச்சு தொழிலாளி பெரிய நாயகி சாமி என்கின்ற அருள்ராஜ்( 71), அவருடைய மகன் ஆரோக்கியராஜ் என்கின்ற அன்பு(49), தனியார் துணிக்கடையில் வேலை பார்க்கும் தொழிலாளி ஆரோக்கியராஜ் பிரான்சுவா(37), முன்னாள் ராணுவ வீரர் மணிகண்டன் (43) உள்ளிட்ட 4 பேர் போலியாக உயில் தயாரித்து விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, அவர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர். அதன்பிறகு அவர்கள் நான்கு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையிலடைத்தனர்.

Next Post

2 வருட காலமாக பூட்டப்பட்ட வீடு தனிமையில் வாழும் குடும்பம்…..! கன்னியாகுமரி அருகே வினோதம்….!

Wed May 10 , 2023
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பழைய ஸ்டேட் பேங்க் காலனி தெருவில் பெர்சியஸ் அலெக்சாண்டர், மாலதி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுடைய 2 மகள்கள் அவர்களை வீட்டில் சிறை வைத்திருப்பதாகவும் ஆகவே இரண்டு வருட காலமாக வெளியே வரவில்லை என்றும் சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு அந்த பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் நேற்று முன்தினம் தீயணைப்பு துறை அதிகாரிகள் காவல்துறையினரின் உதவியுடன் சமூக நலத்துறை அதிகாரி சரோஜினி தலைமையில் […]

You May Like