fbpx

வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது திடீர் மாரடைப்பு……! பள்ளி ஆசிரியர் மரணம்……!

ஆந்திர பிரதேச மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் இருக்கின்ற வேடபாலத்தின் அருகே இருக்கின்ற வாகவரி பாளையம் அரசு பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியர் வீரபாபு என்பவர் கடந்த சனிக்கிழமை பள்ளி வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. பாடம் நடத்திக் கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் மயங்கி சரிந்தார். இதனை கண்டு அச்சம் கொண்ட மாணவர்கள் ஓடிச் சென்று அருகில் இருந்த மற்ற ஆசிரியர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

உடனடியாக அவசர ஊர்தி வீரபாபுவை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்து இருக்கிறார்கள். வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த சில நிமிடங்களில் மாரடைப்பு ஏற்பட்டு ஆசிரியர் உயிரிழந்தது மாணவர்களையும், பள்ளி நிர்வாகத்தினரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கின்றது.

இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றன. உயிரிழந்த ஆசிரியர் வீரபாபுவுக்கு 45 வயதாகிறது எனவும் அவர் அருகில் உள்ள இன்கொல்லு கிராமத்தை சேர்ந்தவர் எனவும் காவல்துறையினர் கூறியிருக்கிறார்கள்.

இளம் வயதில் த்ரீட் மாரடைப்பு, நெஞ்சு வலி உள்ளிட்டவை ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவது தொடர்பான செய்தி தற்போது அடிக்கடி வெளியான வண்ணம் இருக்கிறது. நாள்தோறும் சிறிது நேரம் உடல் உழைப்பு செய்து வந்தால் இதய நோய்கள் பெரும்பாலும் ஏற்படுவதை தவிர்க்கலாம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

சமீபத்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் முடிவில் இப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் 10 நிமிடங்கள் நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் உள்ளிட்டவற்றை செய்து வந்தால் இளம் வயது மரணங்கள் தவிர்க்க படலாம் என்றும் அந்த ஆய்வு ஆலோசனை வழங்குகின்றது.

Next Post

“ புடினின் உக்ரைன் போரால், இந்திய எல்லையில் சீனா ஊடுருவக்கூடும்..” முன்னாள் அமெரிக்க உயர் அதிகாரி எச்சரிக்கை..

Mon Mar 6 , 2023
உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் போரால், சீனா இந்திய எல்லையில் ஊடுருவக்கூடும் என்று முன்னாள் அமெரிக்க உயர் அதிகாரி எச்சரித்துள்ளார்.. கடந்த 2016 முதல் தலைநகர் டெல்லியில் ஆண்டுதோறும் ரைசினா மாநாடு (Raisina Dialogue) என்ற பலதரப்பு மாநாடு நடத்தப்பட்டு வருகிறது.. இந்த மாநாடு புவிசார் அரசியல் மற்றும் புவி-பொருளாதாரம் பற்றிய இந்தியாவின் முதன்மை மாநாடாக உருவெடுத்துள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன் இந்த மாநாட்டை […]

You May Like