fbpx

நிலத்தகராறில் இரு குடும்பத்தினருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம்…..! துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3️ பெண்கள் உட்பட 6 பேர் பரிதாப பலி…..!

மத்திய பிரதேசம் மொரேனா மாவட்டத்திலுள்ள லிபா கிராமத்தில் ரஞ்சித் தோமர், ராதே ராமர் உள்ளிட்ட இருவரும் குடும்பத்துடன் வெகு காலமாக வசித்து வந்தனர் இவர்களுக்கு இடையில் பல வருடங்களுக்கு முன்பிருந்தே நிலத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து கடந்த 2014ஆம் வருடம் ரஞ்சித் ரோமர் மற்றும் ராதிகாமர் வெளியிட்டோரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில் ரஞ்சித் ரோமரின் நண்பர்கள் ராதை தாமரை குடும்பத்தை சேர்ந்த 3 பேரை கொலை செய்துள்ளனர் அதன் பிறகு ரஞ்சித் தோமர் குடும்பத்தினர் அந்த கிராமத்தை விட்டு சென்று விட்டனர்.

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றதால் நீதிமன்றத்தில் இரு குடும்பத்தினருக்கும் இடையில் சமரசம் ஏற்பட்டது என்று கூறப்படுகிறது. அதன் பிறகு 9 ஆண்டுகள் சென்ற பிறகு ரஞ்சித் தோமர் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் சமீபத்தில் அந்த கிராமத்திற்கு மீண்டும் வந்திருக்கிறார்கள். ஆனாலும் பழைய பகையை ராதேத்தோமர் குடும்பத்தினர் மறக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதற்காக 2 துப்பாக்கிகள் மற்றும் குண்டுகளை வாங்கி அவர்கள் தயார் நிலையில் வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது.

இப்படியான நிலையில் ரஞ்சித் தோமர் குடும்பத்தினர் மற்றும் ராதேதோமர் குடும்பத்தினர் இடையே நேற்று மறுபடியும் தகராறு ஏற்பட்டுள்ளது. இரு குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள் முதலில் ஒருவரை, ஒருவர் தாக்கி கொண்டனர். அவர்களை விலக்கும் நடவடிக்கையில் அந்த வீட்டின் பெண்கள் ஈடுபட்டதாக சொல்லப்படுகின்றது.

சண்டை அதிகரித்ததும் ராதே தோமர் குடும்பத்தினர் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கிகளை எடுத்து வந்தனர். அதில் ஒருவர் ஒவ்வொரு குண்டாக போட்டு ரஞ்சித் குடும்பத்தினரை சற்று தொலைவிலிருந்து நிதானமாக குறி பார்த்து சுட்டு இருக்கிறார்.

இதில் ரஞ்சித் குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் 2 பேர் படுகாயம் அடைந்தனர். துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்று பதுங்கிக் கொண்டதாக தெரிகிறது. அவர்களை காவல்துறையினர் மிக தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த கிராமத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

Next Post

இனி ரயில் டிக்கெட் பரிசோதகர்கள் உடலில் கேமரா பொருத்தம்..!! ரயில்வே நிர்வாகம் அதிரடி முடிவு..!!

Sat May 6 , 2023
பயணிகள் உடனான மோதலின் எதிரொலியாக ரயில் டிக்கெட் பரிசோதகர்கள் உடலில் கேமரா பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. ரயில்களில் பயணிகள், டிக்கெட் பரிசோதகர்கள் இடையேயான மோதல் குறித்து தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. அண்மையில் கூட ஓடும் ரயிலில் பெண் பயணியிடம், டிக்கெட் பரிசோதகர் தவறாக நடந்து கொண்டதாக இடைநீக்கம் செய்யப்பட்டார். ஆனால், சில பயணிகள் அராஜகமாக நடந்து கொள்வதாக டிக்கெட் பரிசோதகர்களும் புகார் தெரிவிக்கின்றனர். தொடர்ச்சியாக இதுபோன்ற புகார்கள் வருவதால், […]

You May Like