உத்தரகாண்ட் மாநிலம் தும்கா மாவட்டம் முபசில் பகுதியில் வசித்து வரும் 14 வயது சிறுமி நேற்று அந்த பகுதியில் இருக்கும் ஒரு மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த காவல் துறையினர் சிறுமியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். உடற்கூறு ஆய்வில் சிறுமி சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்திய காவல்துறையினர் அதே பகுதியை சேர்ந்த அர்மன் அன்சாரி என்ற நபரை கைது செய்தனர். கட்டிட தொழிலாளியான அன்சாரி திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை பேசி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி நேற்று தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கண்டேடுக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அர்மன் அன்சாரியை கைது செய்தனர். பாலியல் வன்கொடுமை செய்த பின் சிறுமியை அன்வர் கொலை செய்து மரத்தில் தூக்கில் தொங்க விட்டுள்ளதாக சிறுமியின் தாயார் குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.