fbpx

ஒரே சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட தம்பதி.. அதிர்ச்சி சம்பவம்..!

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம் மயிலாடும்பாறை கிராமத்தில் வசித்து வருபவர் பவித்ரா (22). இவர் ஆர்.கே.பேட்டை அருகே இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அதே நிறுவனத்தி்ல் வேலை பார்த்து வந்தவர் சவுந்தரராஜன் (25). ஆர்.கே. பேட்டை அருகே கொண்டாபுரம் காலனியில் வசிப்பவர்.

சவுந்தரராஜனும், பவித்ராவும் காதலித்து சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு அவர்களது பெற்றோர் சம்மதிக்கவில்லை. தற்போது பவித்ரா 5ஐந்து மாத கர்ப்பமாக இருந்துள்ளார். இந்த நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை கொண்டாபுரம் காலனியில் இருக்கும் சவுந்தரராஜன் வீட்டில் ஒரே சேலையில் பவித்ராவும், சவுந்தரராஜனும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த ஆர்.கே.பேட்டை காவல்துறையினர், இரண்டு பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Rupa

Next Post

சுதந்திர தின விழாவை கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய பிளஸ்2 மாணவி..! அரசுப்பேருந்து மோதி உயிரிழப்பு..!

Mon Aug 15 , 2022
சென்னையில் தனியார் பள்ளியில் சுதந்திர தின விழாவை கொண்டாடிவிட்டு சைக்கிளில் வீடு திரும்பியபோது மாநகரப் பேருந்து மோதி பிளஸ்2 மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை குரோம்பேட்டை அடுத்த அஸ்தினாபுரம், ராஜேந்திர பிரசாத் சாலையில் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த 12ஆம் வகுப்பு பள்ளி மாணவி லட்சுமி ஸ்ரீ (17), மாநகரப் பேருந்து மோதி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். குரோம்பேட்டையில் உள்ள பள்ளியில் […]
சுதந்திர தின விழாவை கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய பிளஸ்2 மாணவி..! அரசுப்பேருந்து மோதி உயிரிழப்பு..!

You May Like