செக்ஸ் டார்ச்சர் அளித்த ப்ரொபசரை சஸ்பெண்ட் செய்தது டெல்லி பல்கலைக்கழகம்…!

டெல்லி பல்கலை கழகத்திற்கு உட்பட்ட தொழில்முறை படிப்புகளுக்கான கல்லூரியில் (சி.வி.எஸ்.) அசிஸ்டன்ட் ப்ரொபசராக வேலை செய்பவர் மன்மோகன் பாசின். இவருடன் வேலை பார்க்கும் பெண் ப்ரொபசர்கள் பலர் அளித்த பாலியல் துன்புறுத்தல் புகாரின் அடிப்படையில் மன்மோகன் பாசினை சஸ்பெண்டு செய்ய டெல்லி பல்கலை கழகத்தின் வைஸ் ப்ரெசிடெண்ட் யோகேஷ் சிங் அனுமதி அளித்துள்ளார்.

இது தொடர்பான கடிதம் எதுவும் தனக்கு வரவில்லை என பாசின் கூறியுள்ளார். எனவே, இதுகுறித்து சொல்வதற்கு எதுவும் இல்லை என்று கூறியுள்ளார். இந்த புகாரை கூறியவர்களில் ஒருவர் ராம்ஜாஸ் கல்லூரியில் வேலை பார்ப்பவர். மற்ற இருவர் சி.வி.எஸ். கல்லூரியை சேர்ந்தவர்கள். மொத்தம் மூன்று ப்ரொபசர்கள் பாலியல் துன்புறுத்தல் புகார்கள் அளித்துள்ளனர்.

பாசின் மீது பல பாலியல் துன்புறுத்தல் புகார்கள் இருப்பதாக அசிஸ்டன்ட் ப்ரொபசர் ஒருவர் கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து மன்மோகன் பாசின் மீது விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் விசாரணையின்போது, மன்மோகன் பாசின் தலையிட்டதுடன், ஆசிரியர் மற்றும் மற்ற பணியாளர்களுடனும் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால், ஆட்சிமன்ற குழு அவரை சஸ்பெண்டு செய்ய முடிவு செய்துள்ளது, என பெயர் வெளியிட விரும்பாத அசிஸ்டன்ட் ப்ரொபசர் ஒருவர் கூறியுள்ளார். அடுத்த ஆடர் வரும் வரை கல்லூரியில் எந்தவொரு நிர்வாக பொறுப்பிலும் இருக்க அனுமதி இல்லை என கூறி பாசினுக்கு கல்லூரியின் ஆட்சிமன்ற குழு தடை விதித்து உள்ளது.

Baskar

Next Post

7 ஆண்டுகளில் 14 முறை கட்டாய கருக்கலைப்பு..! உறவில் இருந்தவர் உதறித்தள்ளியதால் விபரீத முடிவு..!

Fri Jul 15 , 2022
33 வயது பெண் ஒருவர் கட்டாய கருக்கலைப்பு தொல்லைக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் கிழக்கு டெல்லியின் ஜீதாபூர் என்ற பகுதியில் அரங்கேறிய சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், ”உயிரிழந்த பெண் கடந்த 8 ஆண்டுகளாகவே கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். பின்னர் இவருக்கு மென்பொருள் பொறியாளர் ஒருவருடன் உறவு ஏற்பட்டுள்ளது. இருவரும் லிவ் இன் ரிலேஷன்சிப்பில் வாழ்ந்து வந்துள்ளனர். அந்த […]
7 ஆண்டுகளில் 14 முறை கட்டாய கருக்கலைப்பு..! உறவில் இருந்தவர் உதறித்தள்ளியதால் விபரீத முடிவு..!

You May Like