fbpx

உருவாகிறது மோக்கா புயல்…..! தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கன மழை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…..!

தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நேற்று முன்தினம் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்ட நிலையில், நேற்றைய தினம் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. ஆகவே தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் இன்று மாலை மோக்கா என்ற புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் இடையே வரும் 14ஆம் தேதி இந்த புயல் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் வலுப்பெற்ற ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மேற்கு வட மேற்கு திசையில் நகரும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இத்தகைய நிலையில்தான் வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் 5 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதன் காரணமாக, தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அதன் அடிப்படையில், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், பெரம்பலூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது.

Next Post

அடுத்த ஐபிஎல் போட்டியிலும் தோனி விளையாடுவார்…..! சுரேஷ் ரெய்னா நம்பிக்கை ரசிகர்கள் ஹாப்பி…..!

Wed May 10 , 2023
இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி செயல்பட்டு வருகின்ற நிலையில், அவருக்கு தமிழகத்தில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தோனிக்காகவே தமிழ் ரசிகர்கள் கிரிக்கெட் போட்டியை காண ஆர்வமாக செல்கிறார்கள். இந்த நிலையில், தோனி இந்த வருடம் ஐபிஎல் போட்டியோடு தன்னுடைய ஓய்வை அறிவிப்பார் என்று சமீபகாலமாகவே சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவிக் […]

You May Like