fbpx

ஓடும் ரயிலில் செல்போன் திருடிய நபரை கொடூரமாக தாக்கி கொலை செய்த நபர்!

திருட்டு என்பது சட்டவிரோதமான குற்றம் தான், ஆனால் அப்படி சட்டவிரோதமாக திருட்டில் ஈடுபடுபவர்களை தண்டிப்பதற்கு காவல்துறையும், நீதிமன்றமும் இருக்கிறது.ஆனால் காவல்துறையையும், நீதிமன்றத்தையும் தாண்டி மக்கள் என்ற ஒரு மிகப்பெரிய ஜனநாயக ஆயுதம் இருக்கிறது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று அரசியல்வாதிகள் அடிக்கடி சொல்வதுண்டு.

அப்படி ஒரு சம்பவம் தான் உத்திரபிரதேசத்தில் நடைபெற்று உள்ளது.அதாவது உத்திரபிரதேசத்தில் இருந்து டெல்லி வரை செல்லும் அயோத்தி காண்ட் ஓல்டு டெல்லி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணி ஒருவரிடமிருந்து கைபேசியை திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு நபர் ஓடும் ரயிலில் இருந்து கொடூரமாக தாக்குதல் நடத்தப்பட்டு வெளியே தூக்கி வீசப்படும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

சென்ற வெள்ளிக்கிழமை இரவு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. உத்தர பிரதேசத்தின் ஷாஜகான்பூரில் இருக்கின்ற தல்ஹார் ரயில் நிலையத்திற்கு அருகே 20 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞர் ரயில் பாதையில் அமைக்கப்பட்டிருக்கும் தண்ணீர் குழாயில் தலையில் அடிபட்டு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சமூக வலைதளங்களில் வைரலாகும் இந்த வீடியோவில் செல்போனை திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட அந்த இளைஞரின் மீது தாக்குதல் நடத்தும்போது சக பயணிகள் கேலி செய்வதையும் அவர் பெயர் நரேந்திரதுபே என்று அடையாளம் காணப்பட்டு இருக்கிறது. அந்த இளைஞரை கடுமையாக தாக்குவதும், தன்னை விடுவிக்க அந்த இளைஞர் கெஞ்சுவதும் வீடியோவில் பதிவாகி இருக்கிறது. ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்குச் சென்ற நரேந்திர துபே ஓடிக்கொண்டிருக்கும் ரயிலில் இருந்து அந்த இளைஞரை தூக்கி வெளியே வீசினார்.

காவல்துறையினரின் தகவலின் அடிப்படையில் திருடு போனதாக சொல்லப்படும் கைபேசி மீட்கப்பட்டதும் ஆத்திரம் கொண்ட கும்பல் அந்த நபரை சுமார் அரைமணி நேரம் சரமாரியாக தாக்கி ரயிலில் இருந்து வெளியே தூக்கி வீசி இருக்கின்றன என்று கூறப்பட்டுள்ளது. அதோடு ரயில் தண்டவாளத்தில் சடலமாக கிடந்த நபரின் தலையில் பலத்த காயம் மற்றும் ஒரு கால் துண்டிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து குற்றவாளி நரேந்திர துபே பரேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார். அதோடு உயிரிழந்த இளைஞர் குறித்த எந்த விதமான தகவலும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினரின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

’அதுங்க தான் சின்னஞ்சிறுசுங்க... உங்களுக்கு எங்க போச்சு’..? தந்தையால் போக்சோவில் கைதான மகன்..!!

Mon Dec 19 , 2022
15 வயது சிறுமியை கடத்திச்சென்று திருட்டுத்தனமாக திருமணம் செய்து குடும்பம் நடத்திய 16 வயது சிறுவனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்த 15 வயது சிறுமி மாயமாகி விட்டதாக அவருடைய தந்தை காவல்நிலையத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை தேடி வந்தனர். முதல்கட்ட விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது […]

You May Like