பெங்களூரில், ஏழு வருடங்களுக்கு முன் தன்னுடைய தோழியின் வீட்டில் நடந்த பூஜை ஒன்றில் ஆனந்த மூர்த்தியை சந்தித்திருக்கிறார் பாதிக்கப்பட்ட பெண். அப்போது வாழ்க்கையில் பல தடங்கல்கள் இருப்பதாகவும் சில பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் ஆனந்த மூர்த்தி. இதை நம்பிய அப்பெண் அந்த ஆனந்த மூர்த்தியை தன் வீட்டிற்கு வந்து பூஜை செய்யுமாறு அழைத்துள்ளார். வீட்டுற்கு வந்து பூஜை செய்த ஆனந்த மூர்த்தி குடிக்க பானம் ஒன்றை கொடுத்துள்ளார். அதனைக் குடித்த அந்த பெண் மயக்கமடைந்துள்ளார்.
பிறகு கண் விழித்து பார்த்தபோது நிர்வாணமாக படுக்கையில் இருந்துள்ளார். அருகே அந்த ஆனந்த மூர்த்தியும் இருந்துள்ளார். ஆனந்த மூர்த்தியும், அவரது மனைவியும் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி செல்போனில் வீடியோ எடுத்து பின்னர் அந்த வீடியோவை காட்டி மிரட்டி அந்த பெண்ணை தொடர்ந்து ஆனந்தமூர்த்தி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், திருமணம் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையிடம், ஆனந்த மூர்த்தி தன் செல்போனில் இருந்த வீடியோவைக் காட்டி நீ அந்த பெண்ணை திருமணம் செய்யக் கூடாது எனக் கூறியுள்ளார்.
பிறகு இந்த விவகாரம் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு தெரியவரவே இந்த விவகாரம் காவல்துறையினருக்கு சென்றுள்ளது. அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரனிடம் ஆனந்த மூர்த்தி பெண்ணை யாருக்கும் திருமணம் செய்ய முயற்சி செய்யக் கூடாது என்றும், அப்படி செய்தால் வீடியோவை பரப்பிவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இந்நிலையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறை விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. விரைவில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்