ஆந்திர மாநிலத்தில் ஏலுர் மாவட்டம் பீமடோலு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட். கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரின் தந்தை சிறு வயதிலேயே இறந்து விட்டார். அதனால் அவரின் அம்மாவுடன் வசித்து வந்தார். கொத்தனார் வேலை செய்து அதில் வரும் வருமானத்தில் இருவரும் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் வெங்கட்டின் தாய்க்கு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தனது தாயின் நடத்தை பற்றி அக்கம் பக்கத்தினர் மூலமாக வெங்கட்டுக்கு தெரிய வந்தது. எனவே தனது தாயிடம் இனி இது போன்று எதுவும் நடக்க வேண்டாம் என்று எச்சரித்துள்ளார். ஆனால் அவரது தாய் அதை கேட்கவில்லை.
இந்நிலையில் வெங்கட் கொத்தனார் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பியிருக்கிறார். அப்போது அவரது தாய் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்துள்ளார். வீட்டிற்கு வந்த வெங்கடேஷ் இதை நேரில் பார்த்து ஆத்திரத்தில் தாயிடம் சத்தம் போட்டுள்ளார். அதன் பிறகு வெளியே சென்று அளவுக்கு அதிகமாக மது குடித்துள்ளார். அதன் பிறகு வீட்டிற்கு சென்று தாயின் சேலையில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வீட்டிற்குள் சென்ற வெங்கட் வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை என்பதால் அவரது நண்பர் வந்து கதவைத் தட்டி பார்த்துள்ளார். கதவு திறக்கவை திறக்காததால், கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த போது வெங்கட் தூக்கில் தொங்கி கொண்டு இருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் வெங்கட்டின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.