அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரையில், பொதுவாக காதலுக்கு என்று ஒரு பெயர் இருக்கிறது அதாவது காதலுக்கு கண்ணில்லை என்று பலர் சொல்வதுண்டு.
அதேபோல இந்த காதல் மட்டும் தான் ஜாதி, மதம், இனம், மொழி என்று எந்தவித பாகுபாடும் பார்க்காமல் மனதை மட்டுமே பார்த்து ஒருவரிடம் இன்னொருவரை மனதை பறி கொடுக்க வைக்கும்.
அதே புனிதமான காதலால் முறையற்ற நபர்களிடம் ஒருவர் மனதை பறி கொடுத்தால் என்ன நடக்கும்?
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள போலுகாக கொல்லை மலை கிராமத்தை சேர்ந்த நாகராஜ் என்பவரின் மகன் கிரீஸ் இவர் 9ம் வகுப்பு வரை படித்திருக்கிறார். அத்துடன் ஈரோடு மாவட்டத்தில் ஒரு நூல் மில்லில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 13ஆம் தேதி பொங்கல் விடுமுறைக்காக பெட்டமுகிலாளம் கிராமத்தில் இருக்கின்ற தன்னுடைய வீட்டிற்கு வந்திருக்கிறார்.
இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த தன்னுடைய தகப்பனாரின் அண்ணன் உறவு முறையான பசப்பா என்பவரின் மகள் நாகம்மா என்ற பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
நாகம்மா கிரீஷுக்கு தங்கை உறவுமுறை உள்ள பெண் இதனை அறிந்து கொண்ட அவருடைய பெற்றோர் முறையற்ற கிரீஷின் காதலை வன்மையாக கண்டித்து இருக்கின்றனர்.
இந்த நிலையில் தான் கிரீஷ் விடுமுறைக்காக வீட்டிற்கு வந்திருப்பதை அறிந்து கொண்டே நாகம்மா நேற்று முன்தினம் க்ரீஷின் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.
இதன் பின்னர் நாகம்மா வீட்டில் இல்லாததை அறிந்து கொண்ட நாகம்மாவின் தந்தை பசப்பா, அண்ணன் சிவக்குமார் மற்றும் உறவினர்கள் உள்ளிட்டோர் அவரை தீவிரமாக தேடி வந்தனர் .அதன் பிறகு கிரீஷ் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது அங்கே இருவரும் ஒன்றாக இருப்பதை பார்த்த நாகம்மாவின் தந்தை பசப்பா மற்றும் அவருடைய உறவினர்கள் கிரீஷை கடுமையாக தாக்கியுள்ளதாக தெரிகிறது இதன் பின்னர் பசப்பா தன்னுடைய மகள் நாகம்மாவை அங்கிருந்து தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டார்.
இது ஒருபுறம் இருக்க, உறவினர்கள் தன்னை தாக்கியதால், கோபமடைந்த கிரீஷ் அங்கிருந்து சென்று அருகில் உள்ள வீரபத்திரன் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் .இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் வழங்கிய பின்னர் இதற்கு தொடர்புடைய 6 பேரை கைது செய்த காவல்துறை இது குறித்து மேலும் விசாரித்து வருகிறது.