தற்காலத்து ஆண்கள் கிளியை போல வீட்டில் மனைவி இருந்தாலும், குரங்கை போல ஒரு சின்ன வீட்டை தேடி செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.அது போன்ற பல சம்பவங்கள் அவ்வப்போது ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன ஆனால் இந்த சம்பவம் சற்று வித்தியாசமானது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியில் இருக்கிறது தகராபு வலசை என்ற கிராமம்.இந்த பகுதியில் உள்ள எம் பி டி காலனியைச் சார்ந்தவர் ஜோதி, இவருக்கும் பைடி ராஜு என்ற நபருக்கும் சென்ற 6 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர் பைடி ராஜு டைல்ஸ் ஓட்டும் வேலை பார்த்து வருகிறார்
இந்த நிலையில் சமீபத்தில் ஜோதி தன்னுடைய கணவரை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் வழங்கினார்.காவல்துறையினர் இந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு தீவிர விசாரணையில் இறங்கினர்.
இதற்கு நடுவில் ஜோதியை ரகசியமாக கண்காணித்த காவல்துறையினர் அவருடைய நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்படவே அவரிடம் கிடக்கு பிடி விசாரணையை தொடங்கினர்.
அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தனர். அதாவது, திருமணத்திற்கு முன்பே ஜோதிக்கும், சுருராஜு என்ற நபருக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. என்று தெரிவிக்கப்படுகிறது. திருமணத்திற்கு பின்னரும் கூட ஜோதி தன்னுடைய காதலனுடன் நெருக்கமாக இருந்து கொண்டிருக்கிறார். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து இருக்கிறார்கள். இதற்கென்று தனியாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளனர். வெளியூரில் வேலை இருப்பதாக தெரிவித்து அடிக்கடி கள்ளக்காதலனை சந்தித்து வந்திருக்கிறார் ஜோதி.
ஒரு கட்டத்தில் ஜோதியின் கள்ளக்காதல் விவகாரம் அவருடைய கணவர் பைடி ராஜுவுக்கு தெரிய வந்துவிட்டது. பின்னர் பைடி ராஜு இருவரையும் கடுமையாக கண்டித்துள்ளார் ஆகவே கணவன், மனைவிக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் கணவரை கொலை செய்ய ஜோதி திட்டமிட்டார்.
அவருடைய திட்டப்படி கள்ளக்காதலனுடன் சேர்ந்து ஜோதி உணவில் தூக்க மாத்திரை கலந்து தன்னுடைய கணவரை மயக்கமடைய வைத்திருக்கிறார்.
அதன் பின் கழுத்தை நெரித்து கொலை செய்து அதன் பிறகு அவருடைய உடலை யாருக்கும் தெரியாமல் காதலர்கள் இருவரும் சேர்ந்து எரித்து விட்டனர் ஆனால் தன் மீது சந்தேகம் எழாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, கணவரை காணவில்லை என்று காவல்துறையில் புகார் வழங்கியுள்ளார் ஜோதி.
ஆனால் காவல்துறையினர் கிடுக்குப்பிடி விசாரனை செய்ததில் என்ன செய்வது என்று தெரியாமல், உண்மையை ஒப்புக் கொண்டார். பிறகு ஜோதியையும், அவருடைய கணவரை கொலை செய்ய உடந்தையாக இருந்த கள்ளக்காதலனையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள்.